வியாழன், 10 அக்டோபர், 2013

காதல் திருமணம் செய்யாத கடவுள்

காதல் திருமணம் செய்யாத கடவுள்



-பஜ்ஜி - சொஜ்ஜி -41



ஆன்மீகம் என்பது என்னைப் பொருத்த வரை என்னவென்று, சரியாக ஒரே நிலையில் வரையறுப்பது கடினம். எப்போதாவது என்னையறியாமல் வணங்குவதோ! பிரார்த்தனை செய்வதோ நிகழ்ந்து கொண்டு தான் இருக்கும், மற்றபடி எந்த சடங்குகளிலுமோ, பூஜைகளிலும் நம்பிக்கை இல்லாதது போலே வலம் வந்து கொண்டிருக்கிறேன். தீபாவளி, பொங்கல், கார்த்திகை, பிள்ளையார் சதுர்த்தி போன்ற பண்டிகைகள் யாவும் என் அம்மாவின் ’கை’ங்கர்யத்தில் எழும்பும் சமையலறை வாசனைகளால் நல்ல பிள்ளையாக நடந்து தொப்பையை maintain பண்ண உதவும்.

வீட்டில் நவராத்திரி கொலுவை அம்மா நான் பிறந்த வருடத்திலிருந்து வைத்து வருவதாகச் சொன்னார். அவருக்கு உடல் நிலை சரியில்லாத் காரணத்தால் நானும் என் நண்பனுமே படிகளை அமைத்து, கொலு பொம்மைகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தோம். சொந்த ஊரில் வைத்திருந்த கொலுவில் 15% பொம்மைகளே இருப்பதாகத் தோன்றிற்று.

ஒவ்வொரு பொம்மைகளாக எடுத்து வைக்கும் பொழுது தான் நான் அதை கவனித்தேன், அதாவது எல்லா தெய்வங்களின் ஜோடியையும் பார்க்கும் பொழுது அவர்கள் வேறு வேறு CLAN களாக(இனக்குழுவை) எனக்குத் தோன்றியது. அதாவது எல்லா தெய்வங்களும் ஏதோ ஒரு வகையில் வேறு இனக் குழ்வைச் சேர்ந்தவரை காதலித்து மணமுடித்துள்ளது(??).

ராமருக்கு சீதை மேல் காதலில்லாது போனால் அந்த வில் முறிந்திருக்குமா என்பது சந்தேகம். கண்ணன், சிவன், முருகன் என எல்லா தெய்வங்களிலுமே வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று பார்க்க முடியும். சீதை மிதிலை தேசத்து (நேபாள) இளவரசி -ராமன் அயோத்தி. அது போல சிவனாகிய யாசகன் பல அவதாரங்களில் மணமுடிக்கும் உமையானவள் தக்ஷனுக்கும், பரதவருக்கும், பாண்டிய தேச இளவரசி மீனாக்ஷி என்று வேறு வேறு இனக்கலப்பை தான் இவர்கள் காதல் உருவாக்கியிருக்கிறது. முருகன் - வள்ளி, பூமாதேவி - வராக அவதாரம் என பெரும்பானமையான எல்லா தெய்வங்களுமே காதல் மணம் புரிந்திருக்கின்றன.

அப்படியானால் காதல் மணம் புரியாமல், ஒரே இனக்குழுவைச் சேர்ந்தவர்களின் புராணமோ தகவலோ இல்லையென நீங்கள் கேட்டால், இருக்கிறது அந்த ஜோடி தான் பிரம்மா மற்றும் சரஸ்வதி. எப்படி இவர்கள் காதல் மணம் புரியவில்லை என்று சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா?

வெறும் அசுரனை வதம் செய்வது மட்டுமே ஒரு புராணம் ஆகிவிடுமா? கடவுளர்கள் ஒவ்வொரு முறை அவதரிக்கும் போதும், அவர்கள் போர் மட்டும் செய்வது கிடையாது - காதலும் செய்கின்றனர். அதுவும் வேறுபட்ட இனத்தைச் சேர்ந்தவர்களாக. Everything is right in love and war அல்லவா? அதனால் தான் தந்திரமாக வதம் செய்வதும், களவு செய்து மணமுடிப்பது அவதார நோக்கமாக புராணங்களில் அறிந்து கொள்ள முடிகிறது. ஏன் பிரம்மனை இந்த லிஸ்டில் சேர்த்துக் கொள்ளவில்லை  என்று கேட்கிறீர்களா? So, Simple, பிரம்மதேவன் மட்டும் காதல் மணம் புரிந்திருந்தாலோ? அல்லது வேறு இனப் பெண்ணை மனமுடித்திருந்தாலோ? , இவை நிச்சயமாய் நிகழ்ந்திருக்கும்.

1 .பிரமம்தேவனுக்கு என்று தனியான புராணங்கள் இருந்திருக்கும்
2. இந்த சிவனின் சாபத்தை எல்லாம் ஓவர்கம் செய்து தனக்கென ஒரு பிரத்யோக மார்கத்தை உருவாக்கியிருப்பார், அவருக்கும் தனியாக கோயில்கள் இருந்திருக்கும் - என்ன செய்வது...எல்லாம் விதி.

என்னடா இவன் நமது நம்பிக்கைகளை இப்படி அவமதிக்கிறானோ என்றோ?? அல்லது இந்து மதத்தை பரப்புகிறான்?? என்றோ விமர்சித்தீர்களாயின் அதற்கு நான் பொருப்பல்ல.. என் நம்பிக்கைகளை யார் மீதும் தினிப்பதில்லை, ஏனென்றால், என் நம்பிக்கைகள் யாவும் எனக்கென்று பிரத்யோகமாக இருக்க வேண்டும் என்றே விரும்பிகிறேன். இவற்றை ஒரு புனைவாக நான் எழுதியிருக்கும் கட்டுரையின் வாயிலாகவே என் ஆன்மீகமும் பயணிக்கிற திசையை நான் காண முடிகிறது, முடிந்தால்/விருப்பமிருந்தால் உங்களுக்கும் புலப்படும்.

It's Interesting, isn't it?

அடுத்த பகுதியில் இன்னும் சூடாக
ஜீவ.கரிகாலன்


3 கருத்துகள்:

  1. சாதி விட்டு சாதி காதல் செய்தவனையும் (ஜோடியாகவோ அல்லது இருவரில் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கவேண்டும்) , போர் புரிந்து சமூகம் காத்தவனைதான் பிற்காலத்தில் குலச் சாமியாக நாம் கும்பிட்டு இருக்கிறோம். பின்னர் அவர்கள் பதிவு உயர்ந்து, புகழ் திக்கெட்டும் பரவி, அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் கதைகள் சேர்ந்து புராணம் என்ற பூரணம் வைத்து நமக்கு தந்திருக்கிறார்கள் முன்னோர்கள்.

    வேறுபட்ட பார்வை. நல்லதொரு பதிவு!

    பதிலளிநீக்கு