# tag கதைகள் (part -1)
###07
நள்ளிரவு வரை கடிதம் எழுதியது நீதான்
நள்ளிரவு வரை கடிதம் எழுதியது நீதான்
அவள் கைகள்
கிழித்துப் போட்ட துண்டுகளில்
எப்படி என் பெயர்
இருக்கின்றது?
###08
ஒற்றை வார்த்தை
பேசியதிற்கா அந்தரத்தில் பறக்கிறாய்
விழுந்துவிடாதே
எனக்கு நாளையும் அலுவலகம் உண்டு
###09
நான் கிட்டாரை வாசிப்பது
போல் நோண்டுவது,
அவளைப் பற்றிய உன் புலம்பல்களைத்
தவிர்க்கவே.
ஆனால் எனக்குத்
தெரியாது - இன்று
நீ ஒரு முழுப் பாடலை
அப்லோடு செய்துவிட்டாய் என்று
###10
கோயிலுக்கு செல்வது
எனக்கு பிடிக்கும் தான்
ஆனால் நீ
சிற்பங்களைப் பார்த்தால் ஒட்டிக் கொள்கிறாய்
பின்னர்
அன்றிரவெல்லாம் உளியின் சத்தமும் அவளுடைய முனகலும்
###11
கடற்கரை மணலில் நான்,
அலைகளில் நீ, மணற் கோலங்களில் அவள்
யாரும் எதுவும்
செய்யவில்லை, எல்லாம் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது,
இன்றும் அப்படியே இருக்கின்றது. நான் மட்டும் வீடு திரும்புகிறேன்
###12
எண்ணிக்கைகள் ஒழுங்காக
இருக்கின்றது என்று பெருமிதம் – நான்
ஒழுங்காக இருப்பது
தான் சோம்பேறித்தனம் –இது நீ
ஆம். காதல் இதனால்
தான் எனக்குக் கைகூடவில்லை
###13
உன்னைக் கொன்றுவிட
எண்ணிதான், அவளிடம் என் காதலை சொன்னேன்
அவளோ “கொஞ்சம்
அவகாசம் கேட்கிறாள்”
இன்றும் உன் எள்ளலுக்கு நான் தான் ஆளாகிறேன்
###14
கவிதையில் தான் நான் உனை வென்று விட்டேன் என்று நினைத்தேன்
நீயோ என்னைப் பரிதாபமாக பார்க்கிறாய்.. அதுவும் சரிதான்
என் பாடுபொருளுக்கு தான் நாளை திருமணமாயிற்றே
என் பாடுபொருளுக்கு தான் நாளை திருமணமாயிற்றே
- ஜீவ.கரிகாலன்
super but vali
பதிலளிநீக்குthanks a lot
பதிலளிநீக்குஇரு துளி கண்ணீரை மட்டுமே பின்னூட்டமாக இட முடிகிறது என்னால்..
பதிலளிநீக்குஇரு துளி கண்ணீரை மட்டுமே பின்னூட்டமாக இட முடிகிறது என்னால்..
பதிலளிநீக்குபாடு பொருள் :(
பதிலளிநீக்குஆம்... ஆனால் அது என்னுடனே தான் இருக்கிறது
நீக்கு