http://news.oneindia.in/2011/01/14/tnccseeks-pms-intervention-to-end-attack-onfishermen-aid0126.html
திராவிடம் பேசி , தமிழுணர்வு பேசி, பகுத்தறிவு பேசி பொங்கலை தமிழர் திருநாள், தமிழ் புத்தாண்டு என்று மாற்றி உணர்வூட்டி எங்களை கொண்டாடச் செய்த கனவான்களே, அரசியல்வாதிகளே, பணம் சம்பாதித்த பகட்டு மனிதர்களே!!! "இன்று நான் எப்படி கொண்டாடுவது இந்த பொங்கலை ? கீழ்கண்ட கேள்விகளுக்கு யாராவது விடையளியுங்கள் ".
1. திறந்து கிடந்த சாக்கடை மூடியில் ஒரு ஆள் தவறி விழுந்து இறந்த பின் தான் சமூகம் கண்டுபிடிக்கும் சாக்கடையை திறந்து வைத்தால் ஆபத்து என்று, அது போலவே, மீனவன் ஒருவன் கொல்லப் பட்ட அப்புறம் குய்யோ முய்யோ என்று கத்தும் வெளியுறவுத் துறை அமைச்சரே. இப்போது தான் தமிழரின் துயரை கண்டு பிடித்தீரோ?? (யுரேகா) சரி நான் எப்படி கொண்டாடட்டும் இந்த பொங்கலை ?
- உங்களை சொல்லி என்ன பிரயோஜனம் - இனத் துரோகிகள் மலிந்த எங்கள் இனம் அனுபவிக்க வேண்டிய விதி இது, சரிதானே தமிழக அரசே ???
2 .அறுவடைத் திருநாள் எனப்படும் இந்நாளில், தனது கடனை தீர்த்து, புதிய உடை உடுத்தி,தன் குடும்பத்துடன் தன் வேளாண்மைக்கு உதவிய இயற்கைக்கும்,கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் உணர்வுப் பூர்வமான, தொன்மை மிக்க இந்நாளில், பல ஆயிரம் ஏக்கர் பசுமை நிலங்கள் அழிக்கப்பட்டு "green field , eco-plots, paradise" என்று பெயரிட்டு அழித்தால் அவர்கள் எப்படி கொண்டாடுவர், இல்லை மீதி இருக்கும் விலை நிலங்களில் ஒரு பாதி கேடுகெட்ட செயற்கை உரங்களில் கற்பழிக்கப்பட்ட நிலங்களும், மற்றொரு பக்கம் வெல்ல நேராக மட்டும் வரும் காவிரி, பெரியாறு, பாலாறு ,கிருஷன நதிகளை நம்பி வாடும் நிலங்களும், பாடுபட்டு உற்பத்தி செய்த விலை பொருட்களை விற்பனை செய்ய தெரியா விவசாயி - காய்கறியின் விலையை எப்படி ஏற்றுக் கொண்டு பொங்கலை கொண்டாடுவான்.
- ஒரு குறுந்தகவல் வந்ததே?? "ஒரு கிலோவுக்கும் மேலே வெங்காயம் வாங்குபவர்கள் வருமான வரி அட்டையை காண்பித்து தான் வாங்க வேண்டும் - இல்லை ரெய்டு வரும் " என்று அது உண்மை தானோ?
3 .விநாயகர் சதுர்த்தி அன்று கூட பகுத்தறிவை பறை சாற்றும் திராவிடர் சமுதாய சாட்டிலைட் சானல்கள்.தமிழ் புத்தாண்டு கொண்டாட வரலாற்று காவியமான இளைஞன் திரைப்பட நாயகி நமிதாவை அழைக்க, நாங்கள் அவள் பேசிய ,"ஹாப்பி டமில் நியு இயர் டா மச்சி "என்ற போதை தரும் பொன் மொழிகளை கொண்டாடட்டுமா?? இல்லை இளைய தளபதியின் படத்தை பார்த்து கொண்டாடட்டுமா ??
4 . வளர்ந்துவரும் பொருளாதரத்தில் ஏற்ற தாழ்வுகளை கண்டு மலைக்காமல் survival of the fittest என்ற தத்துவத்தினை உணர்ந்து உழைத்தால் வெற்றி, வெற்றி கிடைத்தால் enjoy the extent you can என எளிதான வாக்கியங்களில் வாழ்க்கையை வாழ ஆரம்பித்து ,பொங்கல் கொண்டாடவா?
5 . தமிழ் நாட்டில் இருக்கும் மொத்த தியேட்டரிலும், பெரும் புள்ளிகள் வாழும் குடும்பம் ஒன்று தனகல் படங்களில் ஏதாவது ஒன்றை பார்த்தே ஆகவேண்டும் என்று G.O போடாத சட்டத்தை நிறைவேற்றவா.இல்லை பொங்கல் விளையாட்டுகளை மறந்து உற்சாக பானக் கடையில் (டாஸ்மாக்), தமிழக அரசு நிர்ணயித்த விற்பனை இலக்கை எட்ட என்னால் முடிந்த முயற்சி செய்ய, அக்கடையின் முன்னே இருந்த கூட்டத்தில் நுழையவா ?
--------ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை என்று அம்மா செய்த பொங்கலை தின்று, தூங்கி, தின்று தூங்கி கொண்டாடவா ??
ப்ளீஸ் சொல்லுங்க !!!!!!!!!!!!!!!!!!!!!
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக