திங்கள், 17 ஜனவரி, 2011

What is meditation??

That word had been used both in the East and the West ina most unfortunate way. There are different schools of meditation, different methods and systems. There are systems which say “Watch the movement of your big toe, watch it, watch it, watch it”; there are other systems which advocate sitting in a certain posture, breathing regularly or practising awareness. All this is utterly mechanical. Another method gives you a certain word and tells you that if you go on repeating it you will have some extraordinary transcendental experience. This is sheer nonsense.


- J.Krishnamurthi






Yes, people..don't waste your money and time for useless habits( not about the exercise you learn).
(sorry modern gurus)


The effects of individual transformation on society and the world as a whole:


I think it is important ... that we should understand ourselves totally and completely, because ... we are the world, and the world is us. ... I condemn, judge, evaluate, and say, 'this is right, wrong, this is good, this is bad' according to the culture, the tradition, the knowledge, the experience which the observer has gathered. Therefore it prevents the observation of the living thing, which is the 'me'. ... When the Muslim says he is a Muslim, he is the past, conditioned by the culture in which he has been brought up. Or the Catholic, Communist. You follow? ... So when we talk about living we are talking about living in the past. And therefore there is conflict between the past and the present, because I am conditioned as a Muslim, or god knows what, and I cannot meet the living present, which demands that I break down my conditioning. ... And in the past there is security. Right? My house, my wife, my belief, my status, my position, my fame, my blasted little self – in that there is great safety, security. And I am asking, can the mind observe without any of that? ... Therefore the mind is totally free. And you say, what is the point of that being free? The point is: such a mind has no conflict. And such a mind is completely quiet and peaceful, not violent. And such a mind can create a new culture – a new culture, not a counter-culture of the old, but a totally different thing altogether, where we shall have no conflict at all. 
- JK


(thank you Jiddu)









வெள்ளி, 14 ஜனவரி, 2011

தமிழர் திருநாள் - தமிழர் புத்தாண்டு - எப்படி கொண்டாடுவது?

http://news.oneindia.in/2011/01/14/tnccseeks-pms-intervention-to-end-attack-onfishermen-aid0126.html

 திராவிடம் பேசி , தமிழுணர்வு பேசி, பகுத்தறிவு பேசி பொங்கலை தமிழர் திருநாள், தமிழ் புத்தாண்டு என்று மாற்றி உணர்வூட்டி எங்களை கொண்டாடச் செய்த கனவான்களே, அரசியல்வாதிகளே, பணம் சம்பாதித்த பகட்டு மனிதர்களே!!! "இன்று நான் எப்படி கொண்டாடுவது இந்த பொங்கலை ? கீழ்கண்ட கேள்விகளுக்கு யாராவது விடையளியுங்கள் ".

1. திறந்து கிடந்த சாக்கடை மூடியில் ஒரு ஆள் தவறி விழுந்து இறந்த பின் தான் சமூகம் கண்டுபிடிக்கும் சாக்கடையை திறந்து வைத்தால் ஆபத்து என்று, அது போலவே, மீனவன் ஒருவன் கொல்லப் பட்ட அப்புறம் குய்யோ முய்யோ என்று கத்தும் வெளியுறவுத் துறை அமைச்சரே. இப்போது தான் தமிழரின் துயரை கண்டு பிடித்தீரோ?? (யுரேகா) சரி நான் எப்படி கொண்டாடட்டும் இந்த பொங்கலை ?
- உங்களை சொல்லி என்ன பிரயோஜனம் - இனத் துரோகிகள் மலிந்த எங்கள் இனம் அனுபவிக்க வேண்டிய விதி இது, சரிதானே தமிழக அரசே ???

2 .அறுவடைத் திருநாள் எனப்படும் இந்நாளில், தனது கடனை தீர்த்து, புதிய உடை உடுத்தி,தன் குடும்பத்துடன் தன் வேளாண்மைக்கு உதவிய இயற்கைக்கும்,கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் உணர்வுப் பூர்வமான, தொன்மை மிக்க இந்நாளில், பல ஆயிரம் ஏக்கர் பசுமை நிலங்கள் அழிக்கப்பட்டு "green field , eco-plots, paradise" என்று பெயரிட்டு அழித்தால் அவர்கள் எப்படி கொண்டாடுவர், இல்லை மீதி இருக்கும் விலை நிலங்களில் ஒரு பாதி கேடுகெட்ட செயற்கை உரங்களில் கற்பழிக்கப்பட்ட நிலங்களும், மற்றொரு பக்கம் வெல்ல நேராக மட்டும் வரும் காவிரி, பெரியாறு, பாலாறு ,கிருஷன நதிகளை நம்பி வாடும் நிலங்களும், பாடுபட்டு உற்பத்தி செய்த விலை பொருட்களை விற்பனை செய்ய தெரியா விவசாயி - காய்கறியின் விலையை எப்படி ஏற்றுக் கொண்டு பொங்கலை கொண்டாடுவான்.
- ஒரு குறுந்தகவல் வந்ததே?? "ஒரு கிலோவுக்கும் மேலே வெங்காயம் வாங்குபவர்கள் வருமான வரி அட்டையை காண்பித்து தான் வாங்க வேண்டும் - இல்லை ரெய்டு வரும் " என்று அது உண்மை தானோ?

3 .விநாயகர் சதுர்த்தி அன்று கூட பகுத்தறிவை பறை சாற்றும் திராவிடர் சமுதாய சாட்டிலைட் சானல்கள்.தமிழ் புத்தாண்டு கொண்டாட வரலாற்று காவியமான இளைஞன் திரைப்பட நாயகி நமிதாவை அழைக்க, நாங்கள் அவள் பேசிய ,"ஹாப்பி டமில் நியு இயர் டா மச்சி "என்ற போதை தரும் பொன் மொழிகளை கொண்டாடட்டுமா?? இல்லை இளைய தளபதியின் படத்தை பார்த்து கொண்டாடட்டுமா ??

4 . வளர்ந்துவரும் பொருளாதரத்தில் ஏற்ற தாழ்வுகளை கண்டு மலைக்காமல் survival of the fittest என்ற தத்துவத்தினை உணர்ந்து உழைத்தால் வெற்றி, வெற்றி கிடைத்தால் enjoy the extent you can என எளிதான வாக்கியங்களில் வாழ்க்கையை வாழ ஆரம்பித்து ,பொங்கல் கொண்டாடவா?

5 . தமிழ் நாட்டில் இருக்கும் மொத்த தியேட்டரிலும், பெரும் புள்ளிகள் வாழும் குடும்பம் ஒன்று தனகல் படங்களில் ஏதாவது ஒன்றை பார்த்தே ஆகவேண்டும் என்று G.O போடாத சட்டத்தை நிறைவேற்றவா.இல்லை பொங்கல் விளையாட்டுகளை மறந்து உற்சாக பானக் கடையில் (டாஸ்மாக்), தமிழக அரசு நிர்ணயித்த விற்பனை இலக்கை எட்ட என்னால் முடிந்த முயற்சி செய்ய, அக்கடையின் முன்னே இருந்த கூட்டத்தில் நுழையவா ?

--------ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை என்று அம்மா செய்த பொங்கலை தின்று, தூங்கி, தின்று தூங்கி கொண்டாடவா ??

ப்ளீஸ் சொல்லுங்க !!!!!!!!!!!!!!!!!!!!!
  .

வியாழன், 13 ஜனவரி, 2011

பொங்கலோ பொங்கல்

என் அனைத்து நண்பர்களுக்கும்,இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு(தை 1) வாழ்த்துக்கள் ... 


 தமிழ் புத்தாண்டை,நம் வீட்டு வளர்ப்பு பிராணிகளுடன் நமது குடும்பத்துடன் கொண்டாடுங்கள், தொலை காட்சி முன் அமராது,குடும்பத்துடன் செலவழியுங்கள்.




பொங்கல் சிந்தனை:
பொங்கலுக்கு வாங்கிய காய்கறியின் விலையை கணக்கிட்டு பாருங்கள், 

காய்கறியில் கிடைக்கும் லாபம் எந்த உழவனைச் சேர்கிறது என்று ?? 


இது இன்றைய சூழ்நிலையில் உண்மையான உழவர் திருநாளா ,
இல்லை வியாபர உலகில் விற்பனைக்கான மைய நாள்.


உங்கள் வாழ்வில் சந்தோசம் பொங்கலோ பொங்கல் என பொங்கட்டும் 

புதன், 12 ஜனவரி, 2011

நிலவே நீயே சொல் - ஆட்டோகிராப் -5

         மார்ச் - 23ம் தேதி 2001, பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வணிகக் கணிதம் தேர்வு என்று காலண்டரில் எழுதியிருந்தது, மனோஜின் கை எழுத்து அவ்வளவு அழகாக இருக்கும் ஒவ்வொரு எழுத்தும் அச்சில் வார்த்தது போல் இருக்கும். இன்றுடன் தனது பள்ளி வாழ்க்கை முடிவடைகிறது என்ற ஆவல் தன் மனதில் சுற்றிக் கொண்டிருக்க, அம்மாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான். நெற்றியிலே பூசிய விபூதி மூக்கில் கொஞ்சம் விழ,தன் சேலை முந்தியால் துடைத்து அனுப்பி விட்டாள், அவன் தாய். காலண்டரில் அவன் ராசி பலனை பார்த்தான் -----

 ராசி:கடகம் --:பலன்: பொறுப்பு
                                              ----என்று இருந்தது.

              தன் அப்பாவின் ஓட்டை சைக்கிளை எடுத்துக் கொண்டு , வேக வேகமாக அழுத்திக் கொண்டே பள்ளி நோக்கிச் சென்று கொண்டிருந்தான். போகும் வழியில், தனக்கு வரும் முக்கியமான தேற்றங்களையும், சமன்பாடுகளையும் சொல்லிப் பார்த்துக் கொண்டே பள்ளிக்கு வந்தடைந்தான். தேர்வறைக்கு முன் கூடியிருந்த அவன் நண்பர்களோடு கலந்து கொண்டான், தேர்வு என்பதைக் காட்டிலும் கடைசித் தேர்வு என்பதால் ஒரு வித மகிழ்ச்சி எல்லோர் முகத்திலும் இருந்தது.

பள்ளிக்கு அருகிலே, ஒரு வீட்டில் அப்பொழுது காது குத்து வைபவம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒரே மேளச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. கடைசி பரிட்சை ஒழுங்காக எழுத வேண்டும் என்ற படபடப்பு எல்லோருக்கும் இருந்தது. இந்த இரண்டு வருடங்களில் பரீட்சை நடக்கும் இந்த ஆறே நாட்களில் தான் சிலர் முகம் பக்திக் கலையுடன் திருநீறு இட்டு காட்சி அளித்தது. கையிலே ஒரு காகித உறையுடன் ஒரு கண்ணாடி அணிந்த டீச்சர் வந்தார்.தேர்வறைக்குள் அனைவரும் நுழைந்து, அவரவர் இடத்திலே அமர்ந்தனர்.

"எல்லாரும் மொதல்ல, கேள்வி மற்றும் விடைத் தாளில் உங்கள் பதிவு எண்ணை சரியாக எழுதவும்" என்ற வழக்கமான குரல் ஒலித்திட, கேள்வித் தாள் அவனுக்கும் வழங்கப் பட்டது, அதை பார்த்தவுடன் ஆண்டவனை வணங்கினான்.அவன் நினைத்தது போல் அவ்வளவு கஷ்டமான கேள்விகள் கேட்கப் படவில்லை.எனவே,கேள்விகளை ஒரு முறை படித்த அவன், நிம்மதியுடன் பதில் எழுத ஆரம்பித்தான். கடைசிக் கேள்வியில் இருந்து தலை கீழாக பதில் எழுதுவது தான் அவன் வழக்கம்,ஆரம்பித்தான் .

முதல் பக்கத்தை பென்சிலால் கோடுகளிட்டு, தேற்றத்தை எழுத ஆரம்பிக்கும் போது அவ்வளவு முத்துமுத்தாய் இருந்த அவனது எழுத்து, கொஞ்சம் கொஞ்சமாய்  தேய ஆரம்பித்து .  காரணம் >>காது குத்தும் வீட்டில் ஒலித்த பாடல் 
'"ஏதோ ஒரு பாட்டு, என் காதில் கேட்கும் 
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும் " .
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


"மனோஜ் !! நீ எப்படியும் நல்ல மார்க் எடுத்து பாஸ் ஆயுடுவ, ஆனா எனக்கும் கணக்கு பாடத்துக்கும் ஏனி வச்சாக் கூட எட்டாது !!. .அப்புறம் நீ ஏதாவது ஒரு நல்ல காலேஜுக்கு போயிடுவ, உன் வாழ்க்கையே ரொம்ப ஜாலியா போகும் . ஆனா , நான் தான் இங்கயே கெடக்கனும்னு என் விதி!! எனக்கு இருக்கிற ஒரே பிரண்டு நீயும் என்னை ஒரு 2 மாசத்துல பிரிஞ்சிடுவ......." என்று சொல்ல வந்த வாக்கியம் நிறைவடையும் முன் அவள் கண்களில் கண்ணீர் குளமாக தேங்கியது, அணிச்சையாய் அன்று அவள் கண்ணீரை துடைக்க முற்பட்டு, அவள் கன்னங்களில் அவன் விரல் பட்டதே,அக்கணம் -ஏதோ ஒரு விசை அவனை திடீரென்று ஈர்த்தது போல் இருந்திட - சட்டென்று அவ்விடம் விட்டு அகன்றான்.


                            அன்று அவளோடு மிக நெருங்கிப் பழகியதால் வந்த வினை இது என்று அவனுக்கு புரிந்தது  , சும்மாவே எல்லாப் பசங்களும் அந்த இருவரையும் ஒன்றிணைத்து கிண்டல் செய்து வந்தாலும் ,  அவன் அதை சட்டை செய்யாமல், சாதரணமாகப்  பழகி வந்தான். ஆனால் அவள் கண்ணீரை துடைத்த உடன்  அவன் கொஞ்சம் சலனப் பட்டு இருந்தான். அன்று வரை, அவள் அவனது தோழியாக மட்டுமே அவனுக்கு தெரிந்திருக்க, அப்பொழுது தான் அவள் அவனுக்கு பெண்ணாகவே தோன்றியது, அது மட்டும் இல்லை அவன் அன்றிலிருந்து தான் ஒரு பையன் இல்லை ஒரு மனிதன் என்று தன்னை உருவகப் படுத்திக் கொண்டான்.


                                            அன்று தான் அவன் அந்த கார்த்திக் பாடும், "ஏதோ ஒரு பாட்டு பாடலை " கேட்டான். அன்றிரவு, தன் கனவில் -அந்த கிராமத்திலிருந்து ஊட்டிக்கு டூயட் பாட்டு பாட அவசரமாக சென்றான், உடன் அந்த தாமரையும் சென்றாள். காதலிக்க ஆரம்பித்ததால் தன்னை ஒரு பக்குவமடைந்த ஆளாக, குடும்பத் தலைவனாக கற்பனை பண்ணிக் கொண்டான்.


                        அவன் பெற்றோர்கள் இவனுக்கு பரிபூர்ண சுதந்திரம் கொடுத்து வந்தனர், அவன் ஓரளவுக்கு நன்றாகவே படிப்பதால் அவனை நல்ல பையன் என்று நம்பினார்கள். அந்த தாமரையோட வீடு இவன் வீட்டுக்கு ரெண்டு தெரு தள்ளி இருக்கும், இவுங்க ரெண்டு பேரும் தூரத்து சொந்தம் என்பதனால் இந்த இரண்டு குயில்களின் அறிமுகக் காட்சி பற்றி விளக்க வேண்டிய தேவை இல்லை.அதிலும் நம்ம மனோஜ், நெற்றியில் விபூதியும் , பாக்கட்டில் ஹீரோ பேனாவும் கர்சீப்பும், எப்போதும் இஸ்த்திரி பண்ண சட்டையும் அணிந்திருப்பதால் - படிக்கிற பிள்ளை என்று எல்லாரும் சொல்வார்கள். தாமரை - சினிமா நடிகை ரேவதி மாதிரி குட்டையாகவும், முகப் பொலிவுடனும் இருந்தாலும் ,  மக்கு பொண்ணு மாதிரியே ஒரு லட்சணமும் அவளிடம் தெரியும்.


               ஏற்கனவே ஒருமுறை ,அரையாண்டுத் தேர்வு விடுமறை முடிந்து தேர்வுத் தாள் வழங்கப் பட்டது. வழக்கம் போல் மொழிப் பாடங்களை தவிர மற்ற எல்லாப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண் பெற்ற மனோஜ் சந்தோசமாக தாமரை வீட்டுக்குள் நுழைய,  தாமரையின் கன்னங்கள் வீங்கியிருபதைக் கண்டான்.  உள்ளே சென்ற மனோஜ்ஜிடம் தாமரையின் தாய் அவன் பெற்ற மதிப்பெண்களை பற்றி விசாரித்தாள். அவன் மதிப்பெண்ணை கேட்டவுடன், மறுபடியும் தாமரையின் மண்டையில் ரெண்டு கொட்டு வைத்து, "உன்னை எல்லாம் படிக்க வச்சு தெண்டச் செலவு செய்யுறதுக்கு எவன் கையிலயாவது புடிச்சு கொடுத்துட்டு நான் நிம்மதியாய் இருக்கலாம் " என்று கடுகடுத்தாள்.


        தாமரையை அடிக்க வந்த அவள் தாயை மனோஜ் தடுத்து," ஏன் அத்தை!! கோபப் படுரிங்க.. கணக்கு ஒன்னும் அவ்வளவு கஷ்டம் இல்லை - நான் தாமரைக்கு சொல்லித் தாரேன் , அவள் கண்டிப்பா பாஸ் ஆகிடுவா " என்று சமாதானம் செய்தான்.  தன் வேலையை ஒழுங்காக பார்த்து வந்த மனோஜுக்கு அன்றிலிருந்து தான் அந்தக் கண்டம் ஆரம்பித்தது. அவளுக்கு அன்றிலிருந்தே பாடம் எடுக்க ஆரம்பித்தான் , அவன் சொல்லிக்க்கொடுக்கும் எதுவுமே புரியாத அவள் ,அழுது கொண்டே சொன்ன வார்த்தைகள் தான் அவள் கண்ணீரை துடைக்க வைத்து...காதல் கசிய ஆரம்பித்தது அவனை அறியாமலே.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
      அவளை பற்றிய நினைவுகளை களைத்துவிட்டு, தன் பரீட்சை விடைத்தாளினை பார்த்தான்.எப்போதும் அச்சடித்தது போல் இருந்த எழுத்து அப்பொழுது கிறுக்கலாய் இருந்தது. கேள்வித்தாளை ஒரு ஏளனப் பார்வையில் பார்த்து சிரித்து கொண்டு, ஒரு முடிவுக்கு வந்து விட்டான். அதற்கு மேல் அவன் ஒரு பக்கத்திற்கு கூட எழுதவில்லை.
தாமரையுடன் சேர்ந்து எந்த டுடோரியல் காலேஜுக்கு செல்லலாம் என்று யோசித்துக் கொண்டே, பரீட்சை ஹாலில் இருந்து வெளியேறினான், தான் பெயில் தான் என்று தீர்மானித்துக் கொண்டே.

    கடைசி மணி அடிக்கும் வரை எழுதும் மனோஜ்ஜா? இன்று ஒன்றரை மணிநேரத்தில் எழுந்து செல்வது என்றது போல் எல்லோரும் அவனை பார்க்க, எதையும் சட்டை செய்யாமல், பள்ளியிலிருந்து வெளியேறினான்.வாசலில் ஒருவன் கையில் சில காகித நோட்டிசுடன் இவனுக்காகவே காத்திருந்தது போல் அவனிடம் நீட்ட, மனோஜ் சந்தோசமாக பெற்றுக் கொண்டான்.

     வெற்றி - ஆல் பாஸ் டுட்டோரியல் என்று கொட்டை எழுத்துடன், ஒரு மொக்கை வாத்தியார் கை உயர்த்தி வாழ்த்து சொன்னார். அதை அவன் பார்க்கும் போது அவ்வளவு சந்தோசப் பட்டான். ரிசல்ட் வந்தவுடன், "நேராக போய் அந்தக் கல்லூரியில் ரெண்டு பெரும் சேர்ந்துவிடனும், இனி ஒரு வருசத்துக்கு என்னையும் தாமரையையும் யாராலும் பிரிக்க முடியாது "என்று சந்தோசமாக அவளுக்கு காத்துக் கொண்டிருந்தான்.

          தேர்வு அறையில் இருந்து வெளியே வந்த தாமாரை, மிகவும் வாடிய தாமரையாக இருந்தாள். அவன் கையிலே இருந்த நோட்டீசை பார்த்தவுடன், கெட்ட சகுனமாய் நினைத்து,அவனை முறைத்து பார்த்தாள். "தேர்வு எப்படி எழுதினாய் ?" என்று நகைத்துக் கொண்டே கேட்க , அவனை முறைத்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள்.

                           அவன் யோசித்தான் ,  அவளுக்காகத் தான் வேண்டுமென்றே எழுதாமல் விட்டேன் என்று சொன்னால், அவள் அதை நினைத்து வருந்துவாள் . அதுவே, ரிசல்ட் வந்ததும் -அவன் பெயில் ஆனா காரணத்தினை கேட்கும் போது,"உனக்காகவே நான் இந்த ஒரு வருடம் கடன் வாங்கிக் கொண்டேன்" என்று சொன்னால் - அவள் தன காதலை புரிந்து கொள்வாள், அதற்குப் பின் அவர்களை இனி  யாராலும் பிரிக்க முடியாது என்று எண்ணிக் கொண்டான்.

               தன் வீட்டிற்கு சென்று தான் நன்றாக எழுதி இருப்பதாய் பொய் சொல்லி மகிழ்ந்தான். ஊரில் தன் நண்பர்களுடன் விடுமுறையைக் கழித்தான், அப்பொழுது தாமரையின் வீட்டிற்குச் சென்று அவளைப் பார்ப்பான்.தேர்வு முடிவை நினைத்து அவள் வருந்தும் போதெல்லாம், அவளுக்காக தன செய்திருக்கும் தியாகத்தினை நினைத்துப் பெருமை கொள்வான்.

               நாட்கள், அவன் விளையாடிய மண்ணின் புழுதி போல்,கரைந்து,மறைந்தது வெகு வேகமாக. அடுத்த நாள் தேர்வு முடிவு, எவ்வளவு பெரிய மைனரும் கூட அடுத்த நாள் ரிசல்ட் என்றால் கோயிலுக்கு சென்று ,அர்ச்சனை செய்து, வீட்டிலே அடைந்துக் கிடந்து, பெற்றோரின் பேச்சைக் கேட்டு நல்ல பிள்ளையாய் நடந்து கொள்வான்,தாமரையும் கூட அப்படித்தான். ஆனால், மனோஜ் - கையில் ஒரு பாட்டு புத்தகத்தினை வைத்து பாட்டு படித்து கொண்டிருந்தான்.

         "தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல ......", இவன் குரலும் அப்படிதான் கொஞ்சம் இனிமையான இளையராஜா போல இருக்கும். இவன் பாடிக் கொண்டிருப்பதை ஆச்சரியமாய் அவன் அக்கா பார்த்து வியந்தாள். தனக்கெல்லாம் அடுத்த நாள் ரிசல்ட் என்றபோது காய்ச்சலே வந்ததை நினைத்துப் பார்த்தாள். மனோஜுக்கு நாளை ஒரு சைக்கிள் வாங்கி வந்து பரிசாக கொடுக்க வேண்டும் என்று தன் வீட்டுப் பாத்திரங்களிலும், அரிசி டப்பா போன்றவைகளிலும் சேர்த்து வைத்தப் பணத்தை தன் தந்தைக்கு அவள் தாய் கொடுத்ததையும் எண்ணி, ஏக்கத்துடன் பெருமூச்சு விட்டு மனோஜ்ஜை பார்த்தாள்.

         தன் வாழ்க்கையில் முக்கியமான கனவுக்கென ஏற்பாடுகளை பண்ணிக் கொண்டே உறங்க ஆரம்பித்தான்.

                   கனவில் - தானும் தாமரையும் டுட்டோரியல் காலேஜுக்குப் போக தன் புது சைக்கிளை எடுத்து நேராக அவள் வீட்டுக்கு சென்றான், இப்பொழுது அவன் டீசர்ட்டும்,ஜீன்சும் அணிந்திருந்தான்,கையிலே ஒரு ஸ்போர்ட்ஸ் வாட்ச் ..இல்லை இல்லை அது இப்போது ஒரு கோல்ட் வாட்சாகியது. அவள் வீட்டிற்கு சென்று, மணி அடித்தவுடன் சிகப்பு சுடிதார் அணிந்த தேவதையாய் வந்தாள். அவள் வீட்டினிலும் ஒரு லேடீஸ் bird சைக்கிள் இருந்தது. ஆனால், அவளோ அவன் சைக்கிளில் முன்புறம் அமர்ந்தாள். டுட்டோரியல் காலேஜுக்கு பயணம் புறப்பட்டது, இளஞ்சிவப்பு வெயில் - காலை நேர பனியைக் கரைக்கும் முக்கியப் பணியில் இருந்தது, சாலைக்கு மிக அருகிலே ஒரு ஓடை சலசலத்துக்  கொண்டே இருக்க, அதில் கூட்டம் கூடமாய் நீந்தும் வாத்துகளும் , ஆங்காங்கே நிற்கும் பறவைகளும், சைக்கிளில் போகும் தங்களைக் கூர்ந்து கவனிப்பதை உணர்ந்து கொண்ட மனோஜ். சைக்கிளை மிக  வேகமாகச்  செலுத்தினான். குன்றின் மீது வளைந்து வளைந்து செல்லும் பாதை காரணமாக அவனுக்கு நிரம்ப மூச்சு வாங்க, அவள் தன் மெல்லிய கையினால் அவன் நெஞ்சினில் கை வைத்தாள்.. உடனே மனோஜ்ஜின் வேகம் அதிகரித்தது. ஒரு வழியாக அந்த டுடோரியல் காலேஜ்ஜில் நுழைந்து  , இருவரும் ஜோடியாக அந்த வகுப்பறைக்குச் செல்ல, அங்கே அவன் கணித வாத்தியார் பிரம்புடன் காத்திருந்தார் ,"ரெண்டு பேரும் ஜோடி போட்டு ஊர் சுத்துறதுக்கு தான் என் பாடத்துல பெயிலாயிட்டின்களா ?? உருப்புடாத கழுதைகளா !! " , என்று அடிக்க வந்தார்; அடித்தார்; அவன் கனவினையும் களைத்தார்.

  
               பின்னர் அவனுக்கு தூக்கம் வரவில்லை, இருப்பினும் தன் மனைவி ஆகப்போகும் -தாமரைக்கு என்ன என்னப் பரிசுகள் எல்லாம் கொடுக்கலாம் என்று பட்டியலிட்டான். சுவற்றில் இரவு மங்கலாக எரிந்து கொண்டிருந்த அந்த பச்சை விளக்கின் அரைகுறை வெளிச்சத்தில்.அவன் பெற்றோரின் திருமண நிழற்படத்தின்  போட்டோவில் தாமரையும், தானும் நிற்பதாக பார்த்துக் கொண்டே தூங்கிப் போனான்.




           தனது ரிசல்ட் இப்படி தான் இருக்கும் என்று தெரிந்தாலும், தெரியாமல் பாஸ் போட்டு விட்டால் என்ன செய்வது என்றும் யோசித்துக் கொண்டிருந்தான். மாலை, அவன் வீட்டிற்குள் ஏக களேபரம்," இந்த படுபாவிங்க நல்லா இருக்கமாட்டாங்க, யார் கண்ணு பட்டதோ எம் பயனுக்கு "...என்று ஒரு கோர்வையே இல்லாமல் புலம்பிக்க் கொண்டிருந்தார்கள். ஏதாவது பிரிண்டிங் கோளாரா இருக்கும் என்று கூட யோசித்துக் கொண்டிருந்தார்கள். மனோஜ் பெயில் ஆனதை, அவர்கள் வீட்டு நாய் கூட நம்பாமல் தட்டில் வைத்திருக்கும் சோற்றை உண்ணாது கவலையில் படுத்திருந்தது. என்னதான் காதலாய் இருந்தாலும் , தன் அம்மாவும் , அப்பாவும் துடித்துப் போவதைப் பார்த்து மிகவும் துவண்டு போனான் மனோஜ். நாம் தவறு செய்துவிட்டோமோ என்று வருந்தினாலும் , அடுத்த நொடியே தாமரை அவன் கண் முன்னே தோன்றி மறைந்தாள், ஒரு வழியாக அன்றைய பாடு அத்துடன் முடிந்தது.. மிகவும் சோகத்தில் தூங்குவதுபோல் தூங்கிப் போனான்.


         தேர்வு முடிவில் ஏமாற்றமடைந்திருக்கும் தன் மகன் எதுவும் தவறாக செய்து கொள்ளக் கூடாது என்று அடிக்கடி அவன் அறைக்கு சென்று பார்த்து வந்தாள் அவன் தாய். யாரும் அவனை ஏன் என்று கேட்கவோ கிண்டல் செய்யவோ கூடாது என்று கண்டிப்பான உத்தரவிட்டிருந்தார் அவன் தந்தை. தன் தம்பி பெயிலாய் போனதை நினைத்து அந்த குடும்பத்திலேயே மிகவும் அழுதவள் அவன் அக்கா தான். ஆண் பிள்ளை, ஆண் பிள்ளை என்று செல்லம் கொடுத்து வளர்த்தாலும், பொறுப்பை வளர்ந்த தன் தம்பிக்கு இந்த நிலை நேர்ந்துவிட்டதே என்று தன் குலசாமியை கடிந்து கொண்டிருந்தாள். மனோஜ் மட்டும் நிம்மதியாய் தன் கனவில் தாமரையின் கூந்தலுக்கு மல்லிகைச் சூடிக் கொண்டிருந்தான்.

   அடுத்த நாள் காலை,  வேகமாக எழுந்து , குளித்து, சிற்றுண்டியை முடித்துவிட்டு டுடோரியல் காலேஜ் செல்ல தன் அனுமதி வாங்கி, கிளம்பும்   பொழுது தன் ராசிபலனைப்  பார்த்தான் 
  ராசி:கடகம் --:பலன்: பரிசு 
                                              ----என்று இருந்தது.. தாமரையின் வீடு நோக்கி தன் ஓட்டை சைக்கிளை வெகு விரைவாக செலுத்தினான். 'தாமரையின் அம்மாவிடம் எப்படியெல்லாம் சமாளிக்கலாம்?, இன்றே அவளை டோடோரியால் காலேஜுக்கு அழைத்து செல்லலாமா?'  என்று யோசித்தவாறே அவள் வீட்டினுள் நுழைந்தான். 

            "தன்னைப் பெரிய அறிவாளி என்று நினைத்துக் கொள்பவன், வெகு சீக்கிரம் முட்டாளாக உணர்வான்"  -தத்துவம் , 
இந்த வாழ்க்கையில் பேருண்மை பொதிந்த தத்துவத்தை யாரும் சொல்லவில்லை, நம் மனோஜ் தான் உணர்ந்தான். தான் ஒரு முட்டாள் என்பதை. தாமரை பாஸ், மனோஜ் பெயில் .... அவள் கொடுத்த இனிப்பு மிகவும் கசந்தது, ஏனோ அவள் பெண் என்றும் பார்க்காமல், அவள் முன்பு கண்ணீர் சிந்தினான். அவளின் தாய் அவனை ஆறுதல்படுத்துவதாக வெறுப்பேற்றினாள். விருட்டென்று தன் வீடு திரும்பிய மனோஜ் முதலில் கலங்காமல் தான் இருந்தான், ஆனால், பெயிலானாலும் பரவாயில்லை, தன் மகன் தளர்ந்து போகக்கூடாது என்று தன் தந்தை வாங்கி வந்த, கவிழும் வந்த அதே புதிய சைக்கிள் தன் வீட்டில் இருப்பதைக் கண்டு ஏங்கி ஏங்கி அழுதான்.

  ஒரே பேருந்தில் தான் டுடோரியல் காலேஜு போவதையும் , அவள் கல்லூரி செல்வதையும்  பார்த்த அவன், தன்னை எத்தனை நாட்கள் தான் திட்டிக் கொண்டிருப்பான் ?? வரும் அக்டோபர் 31 -ம் தேதி வரை ??  ஏனென்றால் அன்று இவனுக்கு திருமணம் பெண்ணின் பெயர் "செந்தாமரை ".


நன்றியுடன்
கரிகாலன் 

        



சனி, 8 ஜனவரி, 2011

வீர நாயக்கன் - பகுதி -4

வெள்ளியனையின் வரலாறு

பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் அமைந்த வெள்ளியனை எனும் சிற்றூர் இன்றும் கருவூர் மாவட்டத்தில் உள்ளது, ஆயிரம் ஆண்டுகட்கு முன்னாள் அப்பகுதி அடர்த்தி இல்லாத காட்டுப் பகுதி, அதை நாம் பாலை நிலத்திலும் சேர்க்கலாம். அன்று  கருவூருக்கு தெற்கே பாயும் அமராவதி நதியை ஒட்டியுள்ள பகுதிகளில் பெரிதாக குடியிருப்பு இருக்கவில்லை , ஆனால் தெற்கே உள்ள மதுரைக்கும்; கிழக்கே உள்ள உறையூருக்கும் செல்ல அக்காட்டு பகுதியை தான் உபயோகிக்க வேண்டும்.

அந்த பிராந்தியத்தில் நரி,சர்ப்பம், புலி என ஆபத்துகளும் இருந்தது, இதுபோக அவ்வனப் பிரதேசம் பல சமயம் எதிரிகளின் கூடாரமாகவும் ஆகிவிடும்.எனவே, வாணிபம், போக்குவரத்து, எதிரிகளிடமிருந்து பாதுகாக்க அமராவதிக்கு தெற்கில் சிறு சிறு குடியிருப்புகளை அமைக்க கரூரை ஆண்டு வந்த எல்லா அரசர்களும் முயன்று வந்தனர்.ஆனால், அந்த பகுதியில் புலியின் பயமும், சர்ப்பத்தின் எண்ணிக்கையும் இதற்கு தடையாய் இருந்து வந்தன.

.மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கு பிறகு வஞ்சியை கைபற்றிய பாண்டியனும் அப்பகுதியில் சில ஊர்களை நியமித்தான், மதுரையிலிருந்து கருவூருக்கு எளிதில் வர அவை உதவும் என்பதால்.ஆனால் அங்குள்ள புலிகளின் எண்ணிக்கையை குறைக்காமல் மக்கள் அங்கே அதிகம் வரமாட்டார் என்பதை உணர்ந்து இதற்கென இரு ஆணைகளை பெயர்த்தான்.
1. புலிகளை வேட்டையாட உத்தரவிட்டு, வேட்டை ஆடுபவர்களுக்கு நிறைய சன்மானங்களும்,அவர்களுக்கு நிரந்தர இடமும் வசதியும் செய்து கொடுக்கப் படும்
2. அப்படி தேர்ந்தெடுக்கப் பட்ட இடங்களில் எல்லாம் கோயில் கட்டுவது அல்லது தேவை இருப்பின் புதுபிப்பது.(அப்படித் தான் புனரமைத்துக் கட்டிக் கொண்டிருந்தது இந்த கதையில் வரும் கோயில்)

அவ்வூரில் கோயிலை ஏற்படுத்தி, அதற்கென பல காத நிலங்களை வழங்கி அதில் வேளாண்மை செய்ய தேவைப் படும் தண்ணீருக்காக ஒரு குளமும் வெட்டப் பட்டுவந்தது.அந்த குளத்தை சுற்றி தான் நாயக்கன்மார்களின் குடியிருப்பு இருந்தது. அவர்கள் காஞ்சிக்கும் வடக்கே கோசல நாட்டு அரசும் சோழர்களுடன் ஏற்பட்ட உறவின்பால், அந்நிலத்து மக்கள் பலர் தெற்கு மண்டலத்திற்கு வந்தேறினர்.அப்படிப்பட்ட வந்தேறிகளில் ஒருவன் தான் நம் வீரா எனும் வீரா நாயக்கன்.

கொஞ்சம் கொஞ்சமாக அவ்வூரில் குடியிருப்பு வந்து கொண்டிருந்தது.அவ்வூரின் ஓரத்தில் சந்தை ஒன்றும் உருவானது.இப்படி வேக வேகமாக வளர்ந்து வரும் ஊரில் புலி பயம் மட்டும் குறையவே இல்லை.இரவில் தனியாக ஊரின் எல்லையோரம் கூட செல்வதை தவிர்த்து வந்தனர்.ஓரளவுக்கு அந்த இளம் வேடர்களின் (பொம்மன்,வீரன் போன்றோர்) வீரச் செயல்கள் அவ்வூர் மக்களுக்கு நிம்மதி அளித்தது.

ஆனால் அன்றோ! ஊரினுள் புகுந்த புலி ஒன்று பல நிரைகளைக் கொன்றது ,மக்கள் ஒன்று கூடி கல்லினால் அதை தாக்க வெறி கொண்ட புலி பாய்ந்து வந்து அவர்களையும் தாக்கியது. காயங்களின் வலி அதற்கு மிகவும் வெறி தூண்டியது, பாய்ந்து ஊரை விட்டு  வெளியே செல்ல நினைத்த புலி அவ்வூரின் கிழக்கு எல்லையின் புனரமைத்துக் கொண்டிருக்கும் கோயிலுக்குள் சென்றது.அங்கிருப்போர் இதைக் கண்டு சிதறி ஓடினர், ஏற்கனவே புலியினைப் பார்த்து பயந்து செய்வதறியாது நின்று கொண்டிருந்த கோதையை ஒரு கை மேலே இழுத்தது.

புலியிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ள கோயிலின் உத்திரத்தில் மேல் தொற்றிக் கொண்டிருந்த நொண்டி முத்தன் தான் அது.அவள் தந்தையோ, மூலவரை கட்டி பிடித்து நின்று கொண்டிருக்க.புலி கோயில் வாசலில் எந்த காலை முதலில் வைப்பது என்ற யோசனையில் இருந்தது.இவ்வளவு திகிலிலும் தன் கையில் உள்ள கோதையை எப்படி விழுங்குவது என்பது போல் ஒரு நொண்டி புலி ஒன்றும் நினைத்துக் கொண்டிருந்தது. கோதை தன்னை தூக்கியது யார் என்று கூட பார்க்கவில்லை ஆனால் தன் மேல் விஷம் போன்ற பார்வையை ஒருவன் கக்குகிறான் என்று நினைத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

முத்தரசன், கைக்கு எட்டிய கனியை ருசி பார்க்கும் ஆவலில் அங்கிருக்கும் புலியினை மறந்து அவளை கொஞ்சம் கொஞ்சமாக மேலே இழுத்தான், அவள் கைகளை பற்றிய அவன் முரட்டுக் கரங்கள் அவள் இடையினை பற்ற முயற்சித்தபோது.சட்டென்று அவன் பிடியில் இருந்து நகர்ந்து கீழே விழுந்தாள்.இதெற்கென காத்துக் கொண்டிருந்த புலி ஒரு உறுமலோடு கோயிலினுள் நுழைந்தது.

கோதை கல்லாய் சமைந்தாள், அவள் தந்தையோ செய்வதறியாது பெருமாளிடம் முறையிட்டார்.முத்தரசனின் இதயமும் பல மடங்கு துடித்தது.நம்பியின் கண்கள் தன் மகளை காப்பாற்றுமாறு முதன் முதலாக முத்தரசனிடம் பணிந்து யாசகம் கேட்டது. முத்தனும் குதித்து விட துணிந்தான்,ஆனால் இந்த மாதிரி சமயத்தில் அவன் கால்கள் உதற ஆரம்பித்துவிடும்.அப்பொழுதும் முத்தரசனுக்கு அவன் நொண்டி முத்தன் என்று ஞாபகம் வந்தது.தன் கண் எதிரே அந்த கோதைக் கனி பிணமாவதை பார்க்க இயலாத முத்தன் தன் கையிலிருந்த சிறு கத்தி ஒன்றை கோதையிடம் போட்டுவிட்டு கண்களை மூடினான்.அக்கோயிலில் வீற்றிருக்கும் பெருமாளோ, 'இன்னும் சிலை வைக்கப் படாத கருடரோ ,மாருதியோ இக்கோயிலில் இருந்தால் உன்னை காப்பாற்றுவர் ஆனால் நானோ வெறும் பத்து அவதாரங்களுக்கு உட்பட்டவன், உன்னை காக்கவும் ஒருவன் வரக் கடவுக' என்று வரம் அளிப்பது போல் காட்சி தர,கோயில் மணி ஓசை ஒன்று "தங்","டங்" என்று கேட்டது.

பெருமாள் வரம் அளித்து விட்டார், நாம் எதிர் பார்த்தது போல் கோயில் நடை வாசலில் கைகளை கட்டியவாறு சிரித்தபடி நம் வீரன் நின்று கொண்டிருந்தான், அவன் கையிலே ஒரு வேல் இருந்தது.ஏற்கனவே இருந்த திகிலில் பாதி மூர்ச்சை நிலையில் இருந்த கோதை, அம்மணிச் சத்தம் கேட்டு திக்கித்து போக, புலியும் சற்றே பயந்து திரும்பியது. புலியைக் கொல்வதற்கு தயாராய் வீரனும் இருந்தான்.தனியாக புலியை எதிர்க்கும் தைரியம் கொண்ட வீரனை முத்தன் ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருக்க, வீரன் ஏதேதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.

வேறு எந்த பக்கமும் வழியும் இல்லாததால் புலி கண்டிப்பாக தம் மீது  பாயும் என்பதை அவன் கணக்கு போட்டிருக்கவேண்டும், புலி திரும்பி அந்த பெண்ணையும் தாக்க கூடாது, அதே சமயம் பாய்ந்து வரும் புலியை தாக்கும் போது லாவகமாக ஒதுங்க இடம் வேறு இல்லாததால், வேறு ஒரு புதிய யுக்தி ஒன்றை கையாண்டான்.அவன் தாய் மொழியில் தனக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டிருந்தது அந்த யுக்திக்கான கணக்காகத் தான் இருக்கும்.

சட்டென்று ஐந்தடி உயரத்தில் பாய்ந்து வந்து வீரனை தாக்க வந்த புலி, ஐந்தரை அடி வீரன் எட்டரை அடியில் கணப் நேரத்தில் வளர்ந்ததை கண்டு மிரண்டது.ஆம், வீரனின் தோளில்  கால் வைத்து ஈட்டியுடன் ஏறி நின்றான் பொம்மன், புலி அவனை எப்படி தாக்குவது என்று நினைக்கும் ஒரு இமைப்பொழுதில், பொம்மனின் வேல் ஒன்று புலியின் கழுத்திலும்,வீரனின் வேல் புலியின் வயிற்றிலும் ஆழமாக பாய்ந்தது.அப்புலியும் உறுமிக் கொண்டே கோதையின் காலடியில் விழுந்தது.கோதையின் கண்ணீரில் மங்கித் தெரிந்த வீரனின் முகம், இப்போது நன்கு தெரிந்தது.புலியை சற்று குழப்பம் அடையச் செய்து அந்த கணப் பொழுதில் அதை வீழ்த்தி விடவும் செய்தனர் அவ்வேட்டயர்கள்.

"யாம் காக்கும் கடவுள்" என்று மூலவரான பெருமாள் தன்னை நிரூபித்ததாய் சிரித்துக் கொண்டிருந்தார்.அவ்வூரில் ஒரு புரட்சி உருவாகும் வேளை வந்து விட்டதாய், மாலை வானத்து கதிரவன் தன் மஞ்சள் தூரிகையால்  சமைத்துக் கொண்டிருந்தது     

(தொடரும் )