வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

பாப் கார்ன் - 2

போலீஸ் நிலையத்தில் ஒரு நாள் :


என் ரூமில் திருடு போன என் நண்பர்களின் பர்ஸ் மற்றும் செல் போனை கண்டுபிடிக்க ( புகார் செய்ய ) முதன் முதலில் சென்றேன் .காலையில் டிரைவிங் லைசன்ஸ் எடுப்பதற்காக 5.30 க்கு வீட்டினை திறந்து போட்டு சென்றேன் .... சுமார் 8.௦௦ மணிக்கு போன் காணமல் போன விஷயம் ,,,, மொத்தம் 2 பர்ஸ் மற்றும் ஒரு செல் போன் ...

என் வருகைக்காக நண்பர்கள் காத்திருக்க பக்கத்துக்கு வீட்டில் விசாரித்தோம் , எங்கள் சந்தேகம் எங்கள் அருகே தங்கியிருக்கும் ஒரிசா வை சேர்ந்த 5 பேர் தான் . என்னமோ அவர்களை பார்க்கையிலே அப்படி தான் தோன்றியது ... அவர்கள் தேசத்தில் நம்மையும் இப்படி பார்க்கலாம் அல்லவா?

விசாரணை ஆரம்பமானது ..என் நண்பன்  சிவாவிற்கு ஹிந்தி தெரியும் என்று நினைத்து அவர்கள் வீட்டுக்கு சென்று கதவை திட்டினோம் ... " excuse me ,இதற் சோர் ஆயின்கே " என்று கேட்க , ஒரு திருட்டு முழி ஆமாம் என்றது ..டேய் பாரு அவனாக தான் இருக்கும் என்று ஹிந்தியில் கேட்டோம் " ஏக் செல் அவுர் தோ பர்ஸ் " என்று சொல்ல , அவன் சொன்னான் "நயி நயி !!! தோ பர்ஸ் தோ செல் போன் "..

ஐயயோ இன்னுமொரு செல்-ஆ என்று ஒரு தடவை செக் பண்ணிட்டு 'ஒரு செல் தான் காணும் 'என்று சொல்ல , அவன் மறுபடியும் சொன்னான் "2 செல் "என்று  ,,, அப்புறம் தான் தெரிந்தது அவனுக்கும் தொலைந்தது என்று ..

 பின்னர் போலீஸ் ஸ்டேசன் சென்று புகார் செய்ய முர்ப்பட்டோம் .அந்த ஸ்டெசன்னில் ஒரு pulsar, tcs excel காணமல் போன case-ம், Atm ல் ௪௫௦௦௦ தொலைத்த கேஸ் , ஒரு புருஷன் தொல்லை , வீட்டை விட்டு ஓட புறப்பட்ட 13 வயது சிறுவன் ஆகியோருடன் நின்று கொண்டிருந்தோம் ... 1650 ரூபா செல் போன் கம்ப்ளைன்ட் பண்ண லீவ் போட்டு எங்க லாஸ் ஆப் pay கணக்கு பண்ணினால் அந்த விலையை தாண்டியது ...

அப்பப்பா எத்தன formalities .புகார் செய்ய வந்த நமக்கு என் இவ்ளோ டென்ஷன் .. அவுங்க முன்னாடி உட்கார முடியாம நிற்கிற அளவுக்கு நமக்கு என் இவ்வளவு பதட்டம் ... எதோ ஒரு மேலை நாட்டில் தன்னுடைய டூத் பிரஷ்-ஐ சம்மதம் வாங்காமல் அப்புறப்படுத்தியதற்காக ,ஒரு சிறுவன் கொடுத்த புகாரைக்கொண்டு நீதி மன்றம் அபராதம் விதித்ததாம்..

இங்கே ஒரு மரியாதையை கூட இல்லாமல் நம்மை நடத்தும் police அதிகாரிகளை நாம் கேட்க முடிவதில்லை .... நமக்கு அடிப்படை சட்டம் சுத்தமாக தெரியவில்லை (எனக்கும் தான் ) .. ஒதுங்கி வருவதும் , பயந்து நடப்பதும் , நம் வேலையினை மட்டும் நாம் பார்ப்போம் என்பதும் இப்படிப்பட்ட அலட்சியங்களை நாம் தேசிய குணமாக கொண்டுள்ளோம்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக