சனி, 28 ஆகஸ்ட், 2010

யமனாகும் மருந்துகள்

பின் வரும் மருந்துகள் நம் நாட்டில் , சாதரணமாக விற்கப்படும் மருந்துகள் எவ்வளவு கேடு கேட்ட குப்பைகள் என்றார் பட்டியல் இதோ !!

நண்பர்களே !! இப்பதிவை உங்கள் இடுகையிலும் பதிந்து கொள்ளலாம் ...உங்களுக்கு புண்ணியமா போகும்


DANGEROUS DRUGS HAVE BEEN GLOBALLY DISCARDED BUT ARE AVAILABLE IN INDIA . The most common ones are action 500 & Nimulid.



PHENYLPROPANOLAMINE:

cold and cough. Reason for ban : stroke.
Brand name :
Vicks Action-500
________________________________________________________________________
ANALGIN:

This is a pain-killer. Reason for ban: Bone marrow depression.

Brand name:
Novalgin
___________________________________________________________
CISAPRIDE:

Acidity, constipation. Reason for ban : irregular heartbeat

Brand name :
Ciza, Syspride
____________________________________________________________
DROPERIDOL:

Anti-depressant. Reason for ban : Irregular heartbeat.
Brand name :
Droperol
______________________________________________________________
FURAZOLIDONE:

Antidiarrhoeal. Reason for ban : Cancer.
Brand name :
Furoxone, Lomofen
_____________________________________________________________
NIMESULIDE:

Painkiller, fever. Reason for ban : Liver failure.

Brand name :
Nise, Nimulid
________________________________________________________________________

NITROFURAZONE:

Antibacterial cream. Reason for ban : Cancer.
Brand name :
Furacin
________________________________________________________________________

PHENOLPHTHALEIN:

Laxative. Reason for ban : Cancer.
Brand name :
Agarol
______________________________ __________________________________________

OXYPHENBUTAZONE:

Non-steroidal anti-inflammatory drug. Reason for ban : Bone marrow depression.
Brand name :
Sioril
_______________________________________________________________________
PIPERAZINE:

Anti-worms. Reason for ban : Nerve damage.
Brand name :
Piperazine
________________________________________________________________________
QUINIODOCHLOR:

Anti-diarrhoeal. Reason for ban : Damage to sight.
Brand name:
Enteroquinol 


----கரி

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

சில கருப்பு வெள்ளை கீதங்கள்



அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி, அதன் அருகிலே ஓலை குடிசை கட்டி...
பொன்னான உலகென்று பெயருமிட்டால் .. இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்
(சத்தியமான வார்த்தைகள்!!! இந்த காலத்திலும் பொருந்தும் .. ஏற்ற தாழ்வுகள் மிகுந்த நமது ஜனநாயகத்தின் இன்றைய நிலை)



(தமிழனின் வீரம் மனித வரலாறு ஆரம்பித்த இடத்தில் இருந்து தொடர்கிறது ...
தமிழன் வெல்வான் ) "அஞ்சாமை திராவிடன் உடைமை"


எத்தனை இயந்திரகளும், இயக்கங்களும் வந்தாலும், சுத்தியலும் ,அரிவாளும் மறையாது .comrade.
தமிழ் நாடு அந்த காலங்களில் அரசியலில் சினிமாவை அனுமதித்தது இப்படிப்பட்ட இலக்கியங்களால் தான் ..(சும்மா 50 படம் நடித்தவுடன் முதல்வராகும் கனவு தோன்றுவதற்கு இப்படி பட்ட நல்ல பாடல்கள் கூட அடித்தளமிட்டது ஒரு எதிர்வினையானது )




அறிவியல் வளர வளர , ஆக்கங்களோடு அழிவும் சேர்ந்து வருகிறது..
இது ஒரு தீர்வு சொல்லாது, ஒரே கருத்தினை மட்டும் ஆழ்ந்து நோக்கும் படைப்பு.
(எதனை கண்டான் மதம் தன்னை படைத்தான்?)


உள்ளமெல்லாம் இளகாயோ (மிளகாய் அல்ல ),
இத்திக்காய் காயாதே!! (இதுவும் ஏதேனும் காய் இல்லை)
இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய் (எதிலும் காய் இல்லை )
அற்புதமான ஓசைச் சந்தம் கொண்ட கவிதை ... படமாக்கப்பட்ட விதமோ ஒரு ஒளி வடிவ இலக்கியம்

.

நட்பினை இவ்வளவு அழகாக சித்தரிக்கும் ... பாடல் தமிழில் கொஞ்சம் தான் ...நண்பன் என்றவுடன் தம், தண்ணி, சைட் அடிக்கும் நண்பர்களாகவே சித்தரிக்கும் பாடல்கள் தான் இன்று நாம் காண்பது.



கண்ணா தாசன் பாரதத்தில் இருந்து எடுத்த concept (அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் தன்னை பற்றி கூறும் விதமாக அமைந்த பாட்டினை தழுவி எடுத்தார் கண்ணதாசன்). அருமையான இசை ...காதலை போன்ற மென்மையான பாடல்


S.P.B -இன் இளமை குரலில் ,மிகவும் இளமையான வரிகளை பாடி அசத்துகிறார் ..ஜெமினியும் அதற்கேற்ற துள்ளலுடன் ..இளமையான படைப்பினை வழங்கிய ஸ்ரீதர் ஒரு   legend.



என்ன ஒரு தத்துவம் !!! வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் ..
"உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு "
இதுக்கு மேல என்ன வேண்டும் ???


திருக்குறளில் ஊடல் உவகை என்றொரு அதிகாரம் உள்ளது தெரியுமா??
இந்த பாடலும் அவ்வகையே ......கற்பனையின் சிகரம் ....தேன் துளியாய் ஒவ்வொரு வரியும் இனிக்கும்


பாட்டின் முதல் வரியில் தான் எத்தனை உண்மை !!
இசையில் கொஞ்சம் மேற்கத்திய மனம் வீசும் நல்ல பாடல்



இந்த பாட்டினை கேட்டால் சாமியாருக்கு கூட காதல் வந்துவிடும் (உண்மையான சாமியாருக்கு மட்டும் தான்  !! நிறைய போலிகள் இதையும் மிஞ்சிவிட்டனர் ).. இதுவும் மேற்கத்திய இசை தழுவலில் அமைந்த காலத்தால் அழியாத பாடல்.




என்னை என் அம்மா  வளர்க்கும் போது, பாடிய தாலாட்டுகளில் ஒன்று ..
அம்மா !!!!!நீ என் தெய்வம் .
இப்படி எல்லாம் பாடி குழந்தைகளை வளர்க்கணும் இந்த காலத்து
அம்மணிகளே !!!


தந்தை பாடும் தாலாட்டாக உருவான பாடல், தாய் பாடும் அத்தனை சிறந்த தாலாட்டுகளுக்கும் இணையான பாடல்.பாடலின் இனிமை வரிகளிலா? இல்லை இசையினிலா?? என்பதற்கு பட்டி மன்றமே நடத்தலாம்.


வியாசரின் மகாபாரதம் படித்தேன் கர்ணன் என்பவன் இவ்வளவு நல்லவனாய் சித்தரிக்க படவில்லை ஆனால்.சிவாஜியின் நடிப்பை கர்ணன் பார்த்தால், "நான் இவ்வளவு நல்லவனா என்று வியப்பார்".சீர்காழியின் தமிழ் உச்சரிப்பில் பாதி இருந்தால் கூட இன்றைய பாடகர்கள் தமிழை கெடுக்காமல் இருப்பார்கள்.


சிவாஜியுடன் போட்டி போட நான்கு பேரை உருவாக்க வேண்டும் என்று நினைத்த டைரக்டர், அந்த முயற்சியில் தோற்று போய் அந்த நான்கு பேரையும் சிவாஜியாகவே உருவாக்கினார்.ஆம்,இப்பாடலில் சிவாஜியின் நடிப்பு பாட்டு வரி, இசை இரண்டையுமே  overtake செய்துவிடும்.


அகத்திணை இலக்கியங்களில், தலைவி தலைவனை நினைத்து உருகும் நிலை .
பொழுதுகண்டிரங்கல் என்று திருக்குறளில் ஒரு அதிகாரம் வரும் அதற்கு அர்த்தம் இந்த பாடலில் தெரியும்.




Style-ந பிறப்பிடம் ரஜினி அல்ல , நம் சிவாஜி தான் . எடுத்து வைக்கும் 100 அடிகளில்.ஒரு பாடலை முடிக்கிறார்.காதல் உணர்வு வருவதற்கு கனவு உலகம், செயற்கை நீருற்று , உருளும் பஞ்சு மேதை , ஐந்தாறு தேவதைகள் தேவையில்லை ஒரு சிகிரெட்டே போதும்.இந்த பாடல் தான் ரஜினியின் காதலின் தீபம் ஒன்று பாட்டின் impression  -ஆக இருக்கும்.


காதலில் எதிர்பார்ப்பு இருக்கும்; அதில் எவ்வளவு அழகு இருக்கும் என்பதை அழகாக படமாக்கப்பட்டுள்ளது."சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை "

வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆளப்போகிறான்.....

BENHUR -படத்தினை தழுவி எடுக்கப்பட்ட படம். இன்னும் ஏதோ ஒரு வகையில்(அரசியல் வாதிகளிடமோ /சினிமாவிடமோ/மதங்களிலோ/சில சமயம் இந்தியன் என்ற உணர்வில் கூட நம் இன உணர்வு அடிமையாகிவிடுகிறது) இந்த பாடலை ஈளம் நோக்கும் என் சகோதரர்களுக்கு சமர்பிக்கிறேன்



----கரி

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

பாப் கார்ன் - 2

போலீஸ் நிலையத்தில் ஒரு நாள் :


என் ரூமில் திருடு போன என் நண்பர்களின் பர்ஸ் மற்றும் செல் போனை கண்டுபிடிக்க ( புகார் செய்ய ) முதன் முதலில் சென்றேன் .காலையில் டிரைவிங் லைசன்ஸ் எடுப்பதற்காக 5.30 க்கு வீட்டினை திறந்து போட்டு சென்றேன் .... சுமார் 8.௦௦ மணிக்கு போன் காணமல் போன விஷயம் ,,,, மொத்தம் 2 பர்ஸ் மற்றும் ஒரு செல் போன் ...

என் வருகைக்காக நண்பர்கள் காத்திருக்க பக்கத்துக்கு வீட்டில் விசாரித்தோம் , எங்கள் சந்தேகம் எங்கள் அருகே தங்கியிருக்கும் ஒரிசா வை சேர்ந்த 5 பேர் தான் . என்னமோ அவர்களை பார்க்கையிலே அப்படி தான் தோன்றியது ... அவர்கள் தேசத்தில் நம்மையும் இப்படி பார்க்கலாம் அல்லவா?

விசாரணை ஆரம்பமானது ..என் நண்பன்  சிவாவிற்கு ஹிந்தி தெரியும் என்று நினைத்து அவர்கள் வீட்டுக்கு சென்று கதவை திட்டினோம் ... " excuse me ,இதற் சோர் ஆயின்கே " என்று கேட்க , ஒரு திருட்டு முழி ஆமாம் என்றது ..டேய் பாரு அவனாக தான் இருக்கும் என்று ஹிந்தியில் கேட்டோம் " ஏக் செல் அவுர் தோ பர்ஸ் " என்று சொல்ல , அவன் சொன்னான் "நயி நயி !!! தோ பர்ஸ் தோ செல் போன் "..

ஐயயோ இன்னுமொரு செல்-ஆ என்று ஒரு தடவை செக் பண்ணிட்டு 'ஒரு செல் தான் காணும் 'என்று சொல்ல , அவன் மறுபடியும் சொன்னான் "2 செல் "என்று  ,,, அப்புறம் தான் தெரிந்தது அவனுக்கும் தொலைந்தது என்று ..

 பின்னர் போலீஸ் ஸ்டேசன் சென்று புகார் செய்ய முர்ப்பட்டோம் .அந்த ஸ்டெசன்னில் ஒரு pulsar, tcs excel காணமல் போன case-ம், Atm ல் ௪௫௦௦௦ தொலைத்த கேஸ் , ஒரு புருஷன் தொல்லை , வீட்டை விட்டு ஓட புறப்பட்ட 13 வயது சிறுவன் ஆகியோருடன் நின்று கொண்டிருந்தோம் ... 1650 ரூபா செல் போன் கம்ப்ளைன்ட் பண்ண லீவ் போட்டு எங்க லாஸ் ஆப் pay கணக்கு பண்ணினால் அந்த விலையை தாண்டியது ...

அப்பப்பா எத்தன formalities .புகார் செய்ய வந்த நமக்கு என் இவ்ளோ டென்ஷன் .. அவுங்க முன்னாடி உட்கார முடியாம நிற்கிற அளவுக்கு நமக்கு என் இவ்வளவு பதட்டம் ... எதோ ஒரு மேலை நாட்டில் தன்னுடைய டூத் பிரஷ்-ஐ சம்மதம் வாங்காமல் அப்புறப்படுத்தியதற்காக ,ஒரு சிறுவன் கொடுத்த புகாரைக்கொண்டு நீதி மன்றம் அபராதம் விதித்ததாம்..

இங்கே ஒரு மரியாதையை கூட இல்லாமல் நம்மை நடத்தும் police அதிகாரிகளை நாம் கேட்க முடிவதில்லை .... நமக்கு அடிப்படை சட்டம் சுத்தமாக தெரியவில்லை (எனக்கும் தான் ) .. ஒதுங்கி வருவதும் , பயந்து நடப்பதும் , நம் வேலையினை மட்டும் நாம் பார்ப்போம் என்பதும் இப்படிப்பட்ட அலட்சியங்களை நாம் தேசிய குணமாக கொண்டுள்ளோம்