புதன், 30 ஜூன், 2010

கலைஞரின் காமெடி

பெட்ரோல் விலை உயர்வு வழக்கம் போல் வெகு ஜனங்களை வயிறெரிய வைத்து கொண்டிருக்க கலைஞரின் ஆறுதல் வார்த்தைகள் "பெட்ரோல் விலை உயர்வால் ,பேருந்து கட்டணம் ஏறாது என்று".

என்னோமோ சென்னைவாசிகள் 2 ரூபாய் - 3  ரூபாய் கொடுத்து பயணம் செல்வது போல் அவர் கூறும் ஆறுதல் காமெடி ஆகா தானே உள்ளது . ஒரு நாட்டில் வாழ்க்கை தரம் முன்னேறி தொழில் வளமும் முன்னேறினால் ,அந்த நாட்டில் உள்ள அடிப்படை கட்டமைப்புகளும் , போக்குவரத்துகளும் தரம்வுயரத் தானேச் செய்யும் ?? கொஞ்சம் சொகுசாய் (அதுவும் அமருபவர்களுக்கு மட்டும் ) செல்வதற்கு 2 அல்லது 3 மடங்கு கட்டணம் அதிகமா செலுத்தும் பழக்கம் தான் ஏற்கனவே எங்களுக்கு பழகி விட்டதே !!!

அதுவும் பீக் அவர்ஸ்-இல் சாதாரண கட்டணப் பேருந்து எங்கே வருகிறது ??? மக்களுக்கு சகிப்பு தன்மை என்பது இருந்தால் கூட இதை பற்றி நினைக்கும் பொழுதாவது எதிர்ப்புகளை காண்பிப்பார்கள். நமக்கு தான் மரத்து பொய் விட்டதே .... கலைஞர் பண்ணது காமெடி ..... காமெடி ஆனதோ பொது ஜனம் !!! ஆனா ஒரு விஷயம் , இன்னும் ஒரு ஐந்து வருசத்துக்கு ஏத்தனும்கிற அவசியமே இல்ல !!!!! 




----கரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக