இராமாயணம் காலம் தொடங்கி தமிழன் மீது தவறான கருத்து திணிப்புகள் வந்த வண்ணம் தான் உள்ளது.
இலங்கை அந்நிய மண் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை , நான் முதலில் இந்தியனே , எனினும் அதற்கு முன்னர் நான் மனிதனாக நினைப்பதில் தவறில்லையே ... இன்று இறையாண்மை பற்றி பேசும் அரசியல் வாதிகள் , வோட்டு வங்கிக்காக பயன்படுத்தும் முதல் ஆயுதமே ஜாதியும் , மதமும் தானே !!!!
இன்றைய பிரச்சனைக்கு வருவோம், மருத்துவ முகாம்களில் மருந்துகளுக்காக மட்டும் அல்ல தங்கள் உடல் உறுப்புகள் திருடப்படுகிறது என்ற செய்தி எவ்வளவு அவமானம் ஏற்படுத்துகிறது ஜனநாயகத்தின் மேல் ? என் தேசத்திலோ , இலங்கையினை பற்றி பேசினால் இறையாண்மை கேட்டு விடுமாம் , ராஜ பக்சே -வை ஆதரிக்கும் உரிமையஎன் தேச தலைவர்தளுக்கு உண்டு என்றால் , அதை எதிர்க்கும் உரிமையும் நமக்கு உள்ளது....
இந்தியாவின் புதிய அரசு, என் இன மக்களின் வாழ்வுரிமைக்காக ஆவன செய்யும் என்ற எதிர்பார்ப்பு மட்டுமே எனக்கு!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக