வெள்ளி, 29 மே, 2009

இந்து மகா சமுத்திரத்தில் ஒரு ஜந்து

தோழர்களே,
விகடனில் படித்த ஒரு அவசியமான சங்கதி தெரிந்து கொள்ள , ராஜ பக்சே சீன அதிபருக்கு ஒரு யானையைப் பரிசளிதுள்ளான்..
இது ஏதோ நட்பின் நிம்தம் அல்ல.. இரண்டு புத்த தேசங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து உள்ளன .. துறைமுகம் அமைத்து தருவதாக கூறி சீனா, தீபகற்ப பகுதிக்குள் நுழைய ஆரம்பித்து விட்டது . சேது சமுத்திர கால்வாயிலிருந்து வெறும் 10 கிலோ மீட்டர் தொலைவில் தன் துறைமுக வேலையினை அராம்பித்து உள்ளது ..

மேலும் நமது பிராந்திய நண்பன் பாகிஸ்தானும் , கிட்ட தட்ட தலிபானுக்கு இணையான லிபியனும் , எல்லாவற்றுக்கும் மேலாக இஸ்ரேலும் ராஜபக்சேக்கு ஆதரவு நீட்ட ஆரம்பித்து உள்ளனர்..

வியாழன், 28 மே, 2009

மூன்றாம் உலகப் போர்

இரண்டு ராஜ நாகங்கள் ஒன்றுடன் ஒன்று சண்டை இட்டுக் கொள்ளுமா? ? அதற்கு தெரியும் இரண்டின் விசமும் ஒரே வீரியமும் ஒரே அளவு தான் அதனால் சீற்றம் மட்டுமே சண்டையில் இருக்கும் .. அதுபோல தான் இரண்டு ஜனநாயக நாடுகள் மோதிக்கொள்ளும் பொது அணு ஆயுதங்கள், ஒரு பலத்தினை காண்பிக்க மட்டுமே தங்கள் சக்தியை பறை சாற்றிகொள்வர்....... வட கொரியா, தலிபான் போன்ற சக்திகளிடம் கிடைத்தால்.. நினைத்துப்பாருங்கள் , அறுபது வருடத்திற்கு முன்னர் வெடித்த "லிட்டில் பாய் " லட்சக்கணக்கான உயிர்களை பழி வாங்கியது.
.ம்ம்ம் நினைத்து பார்ப்பது மிக சாதாரணம் அல்ல..நீங்களும் இந்த இணையத்திற்கு சென்று வாருங்கள் "www.threeworldwars.com, www.exitmundi.nl"

புதன், 27 மே, 2009

ஆன்மிகம்

அம்மா ஒரு வேண்டுகோள்














இந்த உலகம் பிடிக்கவில்லை எனக்கு





மீண்டும் வேண்டும் கருவறை எனக்கு ...
















"Now i’m alone filled with so much shame. For all the days I caused you pain. If only i could sleep in your arms again. Mother i’m lost without you."Sami Yusuf - Mother (Turkish)

தமிழன் வெறும் மனிதன் தான்

இராமாயணம் காலம் தொடங்கி தமிழன் மீது தவறான கருத்து திணிப்புகள் வந்த வண்ணம் தான் உள்ளது.

இலங்கை அந்நிய மண் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை , நான் முதலில் இந்தியனே , எனினும் அதற்கு முன்னர் நான் மனிதனாக நினைப்பதில் தவறில்லையே ... இன்று இறையாண்மை பற்றி பேசும் அரசியல் வாதிகள் , வோட்டு வங்கிக்காக பயன்படுத்தும் முதல் ஆயுதமே ஜாதியும் , மதமும் தானே !!!!

இன்றைய பிரச்சனைக்கு வருவோம், மருத்துவ முகாம்களில் மருந்துகளுக்காக மட்டும் அல்ல தங்கள் உடல் உறுப்புகள் திருடப்படுகிறது என்ற செய்தி எவ்வளவு அவமானம் ஏற்படுத்துகிறது ஜனநாயகத்தின் மேல் ? என் தேசத்திலோ , இலங்கையினை பற்றி பேசினால் இறையாண்மை கேட்டு விடுமாம் , ராஜ பக்சே -வை ஆதரிக்கும் உரிமையஎன் தேச தலைவர்தளுக்கு உண்டு என்றால் , அதை எதிர்க்கும் உரிமையும் நமக்கு உள்ளது....

இந்தியாவின் புதிய அரசு, என் இன மக்களின் வாழ்வுரிமைக்காக ஆவன செய்யும் என்ற எதிர்பார்ப்பு மட்டுமே எனக்கு!!!!