ஞாயிறு, 1 ஜூலை, 2012

மரணம்

மரணம் என்பது ஒரு நிறைவு.

மலர் உதிர்ந்தாலும் அந்த மரணமானது, அதன் மகரந்த சேர்க்கையை முடித்ததிலும், நறுமணம் வீசியதிலும், நந்தவனத்தில் வீற்றிருப்பதும் நிறைவடவதே அதன் மரணம்.
இருளை அகற்றி ஒளி பாய்ச்சிய மெழுகுவர்த்தியும் , விளக்கும் அணைந்து போவது தான் அதன் நிறைவு .இல்லையேல் தீபத்தின் அருமையும், பூக்களின் நறுமணத்தையும் நாம் நின்று நோக்க வேண்டிய அவசியம் இருக்காது.

மனிதன் மரணம் அற்றவனாக இருந்தால் அவனுக்கு கலைகள் தேவையில்லை, ஓவியம், கவிதை, சிற்பம், இசை என்று எதுவுமே தேவையற்றது ஆகிவிடும்.ஆகவே தான் கலைகளினால் ஒருவன் இறந்த பின்னும் வாழமுடிகிறது மரணம் தான் நிறைவு, மரணம் தான் வாழ்வின் முழு அர்த்தம், மரணம் தான் கலைகளின் ஆதாரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக