அன்று ஜன நெருக்கடி மிகுந்த பெங்களுரு நகரத்தின் மகாத்மா காந்தி ரோட்டில் நவநாகரிக யுவ யுவதிகள் பாலின வேறுபாடுகளை மறந்து உற்சாகமான இரவு கேளிக்கைகளில் தங்களை ஈடுபடுத்தித் கொண்டும், உணவருந்திகொண்டும் வார முடிவினை கொண்டாடிக் கொண்டிருந்தனர். அந்த பரபரப்பிற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத ஒருவன் வாடகை காருக்காக அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருந்தான், அந்த நேரத்தில் மன்னார்குடி வரை செல்ல அவனுக்கு எந்த ஒரு டாக்சியும் கிடைக்கவில்லை.
இந்த கதையின் தேவை அறிந்தோ என்னவோ, அந்நகரத்திலும் தமிழனுக்கு ஒரு கர்நாடகன் உதவினான். இறுதியில் அவனுக்கு ஒரு வாகனம் கிடைத்தது, வாடகை சற்று அதிகம் என்றாலும் அதை பொருட்படுத்த அவனுக்கு அவகாசம் இல்லை.தன்னை அந்த காருக்குள் நுழைத்துகொண்ட வேகத்திலே தன் கையிலிருந்த செல்போனை எடுத்து அவளுக்கு அவளை அழைத்தான்.ஒரு ரிங் முழுதும் அடிப்பதற்குள் அந்த அழைப்பு துண்டிக்க பட்டது. திரும்ப வரும் பதில் அழைப்புக்காக அவன் காத்திருந்தான்.
போனில் அழைப்பு மணி கேட்டது ,"அம்மு, அழாதே!! நான் தான் கிளம்பிட்டேன்ல, அழாத.. என் மேல உனக்கு நம்பிக்கை இருக்க இல்லையா.. உன் அப்பாவோட மிரட்டல் ரௌடித்தனம் எல்லாம் எங்கிட்ட பலிக்காது.. என் கஷ்டம் எல்லாம் நீ என்ன விரும்பறத என்கிட்டே சொல்லாமலே போயிடுவியோ என்று தான், இப்பவும் ஒன்னும் கேட்டு போகலையே நாளைக்கு ஒன்பது மணிக்கு தானே கல்யாணம் 5.30 மணிக்குள்ள நான் வந்துருவேன், நம்ம பசங்களும் ரெடி ஆயிட்டாங்க, கார் கூட கிளம்பிடுச்சு ..தைரியமா இரு ... ...ம்ம் " போனை அணைத்தான்.
கடைசியாக அவள் சொன்ன வார்த்தை ,"கண்ணா !! நான் உன்னை எவ்ளவோ காயப் படுத்தியிருக்கேன் , ஆனா உன்னை அத மாதிரி ஆயிரம் மடங்கு காதலிக்கறேன், என் உயிருள்ள உடலில் நீ போடும் தாலி மட்டும் தான் ஏறும்டா இது சத்தியம் " கண்ணனின் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது. ஓட்டுனரை கொஞ்சம் வேகமாக ஓட்டிசெல்ல பணித்துவிட்டு தன் கண்களை மெல்ல மூடினான் .....
********************************************************************************
"அம்மு" ... அன்று அவனுக்கு அறிமுகமான நாள் .. சினிமாவில் இருப்பது போன்று ரோஜா பூக்களுக்கு மத்தியிலும், ஆற்றினிலோ அல்லது அருவியிலோ அவள் தோன்றவில்லை.
மன்னார்குடிக்கு அருகிலே விவசாயத்தினை மட்டுமே அடிப்படையாக கொண்ட ஒரு சிற்றூர்.விவசாயம் தவிர வேறு எந்த பிரதான தொழிலும் இல்லாத அவ்வூரில் ,பருவம் மாறிய விடலைப் பயல்கள் சிலர் தங்கள் விடுமுறை நாளில் ஒரு நாள் கிரிக்கெட் ஆடிய களைப்பில் வேப்ப மரத்து நிழலில் ஆளுக்கு ஒரு ஐஸ் வாங்கி கடித்துக் கொண்டே முக்கியமான விவாதத்தில் இருந்தனர். தங்களுக்கான காதலி பற்றிய தொகுதி உடன்பாடு தான் அது.
அப்படி தங்களுக்குள் செய்து கொண்ட உடன்பாட்டின் படி கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
மன்னார்குடிக்கு அருகிலே விவசாயத்தினை மட்டுமே அடிப்படையாக கொண்ட ஒரு சிற்றூர்.விவசாயம் தவிர வேறு எந்த பிரதான தொழிலும் இல்லாத அவ்வூரில் ,பருவம் மாறிய விடலைப் பயல்கள் சிலர் தங்கள் விடுமுறை நாளில் ஒரு நாள் கிரிக்கெட் ஆடிய களைப்பில் வேப்ப மரத்து நிழலில் ஆளுக்கு ஒரு ஐஸ் வாங்கி கடித்துக் கொண்டே முக்கியமான விவாதத்தில் இருந்தனர். தங்களுக்கான காதலி பற்றிய தொகுதி உடன்பாடு தான் அது.
அப்படி தங்களுக்குள் செய்து கொண்ட உடன்பாட்டின் படி கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
1 . ஒருவனுக்கு நிச்சயக்கப்பட்ட காதலி மற்றவர்களுக்கு தங்கை ஆவாள்
2 . அதே போன்று ஒருவனுக்கு காதலில் பிரச்சனை ஏற்பட்டால் மற்றவர்கள் அவனுக்கு துணை நிற்க வேண்டும் .
3 . அதே சமயம், காதலுக்காக தங்கள் அணியான சோழ பாய்ஸின் (உருப்படியாக எந்த ஆட்டங்களிலாவது விளையாடாமல் இருந்து அணிக்கு பலவீனம் சேர்க்கும் எந்த ஒரு நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது
ஆகிய மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன "
அதற்கு பின் தங்களுக்கான ஆள் யார், யார் என்பதை தீர்மானிக்கும் செயற்குழு ஆரம்பமானது. அணித்தலைவர் ராஜா,தன் பள்ளிக்கு வெளியில் சுண்டல் கடை வைத்திருக்கும் கிழவியின் பேத்தியான தமிழரசியை தேர்ந்தெடுத்தான், அடுத்ததாக வாத்தியின் மகன் சுரேஷுக்கு அந்த ஊரில் விடுதியில் தங்கி படிக்கும் சந்திரவதனாவினை தேர்ந்தெடுத்தனர், இந்த போட்டியில் இருந்து விலகிய கவியரசன், திலக் ஆகியோருக்கு அடுத்த முறை பங்காளி - கண்ணனுக்கு வந்தது.
"சொல்லு பங்காளி உன் ஆளு யாருன்னு" என்று ஆர்வமாய் கேட்டான் ராஜா, ஏனோ ஒரு கணப்பொழுதில் தன் எண்ணத்தில் உதித்த தன் உறவுப்பெண் செல்வி எனும் அம்முவை தேர்ந்தெடுத்தான்.கண்ணனுக்குள் உடனே ஒரு கண்ணதாசன் உதாயமாகி ஒரு கவிதையை பெற்றெடுத்தான்.
1 ."நீச்சலே தெரியாத நான்
அன்று கிணற்றிலே விழுந்தேன்
பிழைத்துக் கொண்டேன் !!
இன்று உன் பார்வை பட்டவுடனே
செத்து விட்டேனே ..!!
- உதயமாகும் காதலன் - கவிஞன் -கண்ணன் ..... கண்ணதாசன்
(தொடரும் - 1 )