இந்த படத்தை பற்றி பல விமர்சனங்களை பார்த்த பின்பு எனது பார்வையினை இந்த பதிவில் பிணைக்கிறேன். a mani ratnam film -என்று விமர்சனம் சொல்ல கூடாது , பலர் இந்த கதையில் மணிரத்தினம் இப்படி fantacy settings போடக் கூடாது என்று விமர்சனமே லாஜிக் இல்லாதது ..
நமக்கு தெரிந்த ராமயணம் என்ன யதார்த்தமான கதையா? fantacy வேணும் என்பதினால் தானே கும்பகர்ணன் ,அனுமன் போன்ற கதா பாத்திரம் உருவாக்கப்பட்டது.
சரி நாம படத்துக்கு உள்ள போவோம் , இந்த கால சினிமாவிலே hero opening scene, build up scene வைக்குறதுக்காக என்னன்ன சிரமங்கள் படுறாங்க நம்ம directors . Shutter கதவுல வெல்டிங் வச்சு - என்ட்ரி ஆகுறது, டால்பின் மீன் மாதிரி நீந்துறது ,சுருட்டு பிடிக்கிறது, பூசனிக்காய உடைக்கிறது , அல்லக்கைகள விட்டு பில்ட் உப குடுக்கறதுன்னு தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரத்தின் என்ட்ரிகளுக்கு இடையே, அவ்வளவு உயரமான மலையிலிருந்து தண்ணிரில் குதிச்சு , தப்பு மேளம் கொட்டி அப்டியே ஹீரோயின கிட்நாப் பண்ணும் விக்ரம் standing tall. பட்டய கிளப்பிட்டாரு (ஆனா உண்மைக்கே விக்ரம் டூப் போட்ட அபிஷேக்கு நமஸ்தே )
பக் , பக் , பக் , பக் என்று சொல்லும் போதும், ராவணன் மாதிரி ஒத்தையா -ரெட்டையா பார்க்கும் போதும் ,குருவம்மா ன்னு கூப்பிடும் போதும் அழகா இருக்கிறார்.அப்புறம் ப்ரியாமணி ,தம்பி ன்னு இழப்புகளில் துடிக்கும் பொது நம்மையும் அழ வைக்கிறார்..பின்னர் போலீஸ் காம்பில் திருடும் போதும், மச்சினன் கையினை வெட்டும் போதும் மிரள வைக்கிறார்.அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் போலீஸ் தன்ன மோப்பம் புடிச்சிட்டங்கன்னு ஒரு முழி முழிப்பரே !!!! விக்ரம் மேலும் ஒரு சிகரம் உங்களுக்கு .. அதே மாதிரி அந்த உடம்பு , இந்த காட்டு வாழ்க்கை எல்லாவற்றிலும் முழுதுமாக ஊடுருவிட்டார் விக்ரம்.
உங்களுக்கு சரியான தீனி இந்த ராவணன் தான் ....
ராமன் ,சீதை , அனுமான் ,கும்ப கர்ணன் :
ஹேராம் !! பிரிதிவ் ராஜ்'' மொழி'' படம் ஹீரோவாக பார்த்துவிட்டு , இப்படி ஒரு ஆண்டி ஹீரோ மாதிரி பார்க்க முடியுமா?? முடித்து காட்டி இருக்கிறார் !! சாதரணமா இல்ல ராமன் என்கிற sensational கடவுள் (பாபர் மசூதி முதல் சேது சமுத்திரம் வரை ராமன் மிகுந்த சர்சைக்கு உள்ளான கடவுள்), ஒரு anti-heroவாக வளம் வருகிறார். பாடி லாங்வெஜ் , பிட்நெஸ் ,ரொமான்ஸ் ன்னு எல்லாத்துலயும் கலக்கிட்டாரு... அதுவும் சக்கரைய என்கவுன்ட்டர் பண்ணும் முன் வில்லத் தனமாக சிரிப்பாரே (எத்தன பேரு இதல்லாம் கவனித்தீர்களோ), ஐஸுக்கு முத்தம் கொடுக்க மட்டும் ரொம்ப கூச்ச படுறாரு இந்த ராமரு ...
ராகினி :
ராவணன் திரைக்கதை முழுதும் ராய்யினை சுரடி தான் பின்னப் பட்டுள்ளது, படம் முழுவதிலும் , ஆற்றில் விழுந்து, மலையில் இருந்து குதித்து ,மரத்தில் சிக்கி ,மலையில் ஏறி , உருண்டு , புரண்டு , அழுது ,ஏங்கி மீண்டும் ராமனுடன் சேர்ந்தவுடன் ஏற்ப்படும் அதிர்ச்சி தான் பண்பட்ட நடிகை என்ற முத்திரை பெற்றுவிட்டார், பிரபுவை முறைப்பதில், மலையில் இருந்து குதிக்கும் பொழுது , அழுது கொண்டே விக்ரமிடம் பக், பக் என்று சொல்வதிலும் கை தட்டல் பெறுகிறார். வயது ஏற ஏற அழகில் மின்னுகிறார், மணி சார் தேவை அற்ற கிளிவேஜ் குளோஸ் அப் ஷாட்டுகளை தவிர்த்திருக்கலாம்..
கார்த்திக் & பிரபு :
முக்கியமான இரு கதா பாத்திரங்கள் , அனுமனாக கார்த்திக் செய்யும் சேட்டைகளும் சரி , பிரபுவும் சரி ரொம்ப நாளைக்கு பின் நல்ல ஒரு படம் பண்ண திருப்தி இருக்கும். அதிலும் பிரபுவுக்கு சற்று வெயிட் ஆனா கேரக்டர் தான் !!!!
ஐஸ்வர்யாவுடன் பேசும்பொழுது "எம் பொண்டாட்டி கூட இப்படி பேசுனது கிடையாது " ன்னு சொல்லும் போதும், கார்த்திக்-ஐ பிடிக்கும் போதும் , "கெடா, கெடா கரி " பாட்டில் ஆட்டுகுட்டிய தூக்கி கொண்டு பாடும் போதும் செம விசில் தான் போங்க .. ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நிறைவான கேரக்டர் பண்ணியிருக்கார். நிற்க :::::: உண்மையிலேயே அதிகமான விசில்களுக்கு சொந்தக்காரி நம்ம பிரபுவோட ஜோடி நித்தி "ரஞ்சிதா " தான் , ஆனா அம்மணிக்கு வேலை ஒன்னும் இல்ல, சும்மா ஒத்தாசைக்கு நின்னு போயிருக்கு ....!!!!
வையாபுரி இந்த படத்தின் மூலமா புது அவதாரம் கொண்டு அடுத்த நிலையினை எட்டியுள்ளார்,பிரியா மணி பரிதாபத்துக்குரிய கதா பாத்திரம் நம்மையும் கல்லாக்கி விடுகிறது.
வசனம்:
அம்மா சுகாசினி அம்மா வின் வசனம் என்று நம்ப முடியவில்லை ,அத்தனையும் பிராண்டட் மணி சார் ஸ்டைல் ; சில இடங்களில் ஏற்ப்படும் தடுமாற்றம் மூலமே அம்மணி எழுதியிருப்பார்களோ என்று தோன்றுகிறது. இருப்பினும் " 14 நாள் காப்பாத்தி வச்ச உயிர் ,பத்து கேவலமான வார்த்தையிலே போயிரும் "ன்னு ஐசு சொல்லும் போது, சபாஷ் !!!
ஆக்கம் :
படத்தில் பெரும் பங்கு ஆற்றியவர் யார் என்று சொன்னால் அந்த இருவர் தான் சிவனும் ,மணி கண்டனும் எங்கல்லாம் தொங்கினார்களோ ???அப்படி பட்ட காட்சிகள் ,சும்மா செதுக்கி எடுத்து இருக்கிறாங்க .. கேரளாவா ? கூர்க்-ஆ? வாடா நாடா ?வெளி நாடான்னு பார்க்காத இடங்கள்...இந்த இடங்களை பார்பதிலேயே நம் கண்கள் லயித்து விடுவதால் , ஒரு சில உன்னத கட்சிகளையும், வசனங்களையும் விட்டு விடுகிறோம். அந்த கடைசி சண்டைக்காட்சியும், ஐசு மலையிலிருந்து விழும் காட்சியும் ....அப்பப்ப்பா வெழுத்து கட்டிடாங்க !!! வாழ்த்துகள் !!!
இசை :
மணிரத்தினம் ,அற கூட்டணி கேட்கவா வேணும் ....டைட்டில்லையே ஒரு பெப் குடுக்கிறாரு பாருங்கோ "வீரா வீரா " செம விருந்து ..அப்புறம் " உசிரே போகுதே , காட்டு சிரிக்கி " பாடலும் கட்சியாகக பட்ட விதமும் மிக நேர்த்தி , ராவணன்,ராகினிக்கு இடையே நடக்கும் உரசல்களில் (தொடாமல் தான் ) காமம் தெரியனும் அதுவும் பக்குவமா எல்லைக்குள்ளேயே ...இந்த பாடல் படமாக்கப்படுவது மிகவும் கடினமான ஒன்று தான் .. பின்னர் இடை வேலை பிறகு வரும் இரண்டு பாடல்களும் அருமை ..ஆனா கடைசியா வரும் ஒரு நிமிடப்பாடல் "நான் வருவேன் பாடல் " ....ஐயோ நம்மளையும் ஒரு பள்ளத்தாக்கிலே தள்ளுது ,அப்படி ஒரு இசை (எல்லோரும் கொஞ்சம் உக்காந்து பாத்துட்டு போய்டுங்க ).பின்னணியிலும் நமக்கு இது வரை அதிகம் பழக்கமில்லாத கருவிகளை பயன் படுத்தியுள்ளார் என்று நினைக்கிறேன்.... ரஹ்மான் ரஹ்மான் தான் , வேற என்ன சொல்ல ..
என்னடா மணி ரத்தினம் பற்றி சொல்லவே இல்லைன்னு பார்க்கிறிங்களா ?? அவர் தான் எல்லா அம்சங்களிலும், கோணங்களிலும், காட்சிகளிலும் , கதா பத்திரங்களிலும் மின்னுவது மணி ரத்தினம் எனும் படைப்பாளி தான். இந்த படத்தினை சும்மா பார்த்திட்டு விமர்சனம் எழுதல நான் , நான்காம் முறையாக பார்த்த பின்பு தான் எழுதிகிறேன்.இந்த படைப்பு இன்னும் ஒரு சிறந்த திரைப்படமாய் உலக சினிமா வரலாற்றில் பதிவு செய்யும் ... என்ன ராவணன் சாகுறது நமக்கு கஷ்டமா இருப்பதை காட்டிலும், விக்ரமும் , ஐசும் சேர்ந்து பிரித்வி ராஜ்க்கு டாட்டா காட்டினா சந்தோசமா வெளிய வரலாம்!! ஆனா சீதையும் ராவணனும் - ராமனுக்கு டாட்டா காட்ட முடியுமா இந்த நாட்டிலே !!!
அதனால ராட்சசன் அழிவதுடன் படமும் முடிகிறது!!!!! எனினும் இது ஒரு அழகியல் கதை தான்
வாழ்த்துகள் மணி ரத்தினம் & குழு !!!!!!
----கரி