செவ்வாய், 3 ஜூலை, 2012

முகநூல் கவிஞன்

ஓலைச் சுவடியில் இருந்து, எழுத்துகள் அச்சில் ஏறும்போதும் இப்படித் தான் இருந்திருப்பார்களா 
இந்தப் பெருமக்கள் ?? முகநூல் கவிஞன் என்று தீண்டத்தகாதவனைப் போல் பார்க்கிறார்கள்.

முகநூல் வந்த பின் வாசகர்கள் எண்ணிக்கை அதிகமாகிறது , படைப்பாளிக்கும் - வாசகனுக்கும் உண்டான இடைவெளி குறைகிறது , போலிகள் எளிதில் விமர்சிக்கப் படுகின்றன, உலகம் முழுக்க வாசகர்கள் இணைவதற்கு ஒரு தளம் கிடைத்துள்ளது. வெகு சீக்கிரம் அவனுக்கு பல தளங்களில் வாசிப்புகள் சாத்தியமாகின்றன, அவனது சந்தேகம் தீர்த்து வைக்கப் படுகின்றன .

இதில் என்ன பிரச்சனை, அதே சமயம் அவன் சீக்கிரமே எழுத முயல்கிறான், அதைப் படைப்புகள் என்று நினைக்கிறான், உடனே இலக்கியம் பற்றிப் பேசுகிறான், அது தானே உங்கள் பிரச்னை ?? படைப்புகள் என்ன தான் உருவானாலும், சிறந்த படைப்புகள் தானே தொடர்ந்து நிற்க முடியும் ஒருவன் அரைகுரயைத் தெரிந்தால் அவன் எளிதாக இங்கும் ஓரங்கட்டிவிடப் படுவான், அப்படியிருக்க உங்களுக்கு ஏன் இத்தனை கோபம் , வஞ்சம்??

இது பரிணாமம், நவீனத்தை நம்பினால் இதையும் ஏற்றுக் கொள்ளுங்கள், இல்லையேல் ஆப்பிள் ஸ்டோரில் ஒரு கவிஞர் வெளியிடப் போகும் கவிதைத் தொகுப்பு உங்கள் வயித்தெரிச்சலைக் கிளப்பும் அபாயம் இருக்கிறது.

4 கருத்துகள்:

 1. "ஓலைச்சுவடியில் இருந்து, எழுத்துகள் அச்சில் ஏறும்போதும் இப்படித் தான் இருந்திருப்பார்களா
  இந்தப் பெருமக்கள் ?"

  கட்டாயமாக!
  "audio cassette" இல் என்னடா இருக்கிறது?! "gramaphone record" இன் இசையே தனி தான்!" என்பார், தாத்தா.
  "அட cd இல் என்னடா இருக்கிறது! cassette இல் கிடைக்கும் இன்பமே தனிதான்!" என்பார் அப்பா.
  நமக்குத்தான் தெரியும், MP3 player எத்தனை அம்சங்கள் கொண்டது, முன்வந்தவற்றை விட எவ்வளவு அருமையானது என்று!

  அது போலத்தான், பரிணாமத்தை (evolution) யாரும் சட்டென்று ஏற்றுக்கொள்வதில்லை.
  Moreover, today, Facebook is also considered to be a very informal platform, and not for serious hobbyists and professionals. இதுவும் சீக்கிரம் மாறும்! :)

  இப்போதைக்கு ஒரே வழி, முகபுத்தக கதைகளை, கவிதைகளை, புத்தகமாக வெளியிடுங்கள், கரிகாலன்!!! :)

  பதிலளிநீக்கு
 2. அன்பு நண்ப, ஆரம்பத்தில் எழுத்தாளன் என்பது ஒரு மாய தோற்றத்தில் சமூகத்தில் ஒரு கௌரவமான இடம் என்ற எண்ணங்கள் இருந்தன, ஆனால் இப்பொது தான் அந்த இடம் எவ்வளவு துயரமானது என்று என் நபர்களை கண்டு புரிந்து கொண்டேன், சமூகம் மீது நான் சாடும் போதெல்லாம் இறுதி பலனை நான் வண்டிக் கொள்வது என் சுயத்தை அறுத்தல் தான் தவிரே வேறேதும் இல்லை.

  எழுத்தாளனாக சமூகத்தில் எந்த நிருவுதல்களையும் என்னால் செய்ய முடியுமா? என்பதை காலம் முடிவு செய்யட்டும் , இந்த பதில் சில மேதாவிப் படைப்பாளிகளுக்கு இணையத்தை ஆக்கப்பூர்வசமூக ஊடகமாக மாற்றும் வர்கத்தின் சார்பாக ஒலிக்கும் என் குரல் அவ்வளவே

  காலம் பதில் சொல்லும் நண்ப, "அடுத்த நொடி மறைத்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் எத்தனையோ?"

  பதிலளிநீக்கு
 3. //எழுத்தாளனாக சமூகத்தில் எந்த நிருவுதல்களையும் என்னால் செய்ய முடியுமா? என்பதை காலம் முடிவு செய்யட்டும் , இந்த பதில் சில மேதாவிப் படைப்பாளிகளுக்கு இணையத்தை ஆக்கப்பூர்வசமூக ஊடகமாக மாற்றும் வர்கத்தின் சார்பாக ஒலிக்கும் என் குரல் அவ்வளவே

  காலம் பதில் சொல்லும் நண்ப, "அடுத்த நொடி மறைத்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் எத்தனையோ?"//

  i appreciate you jeeve karikalan...

  பதிலளிநீக்கு