வியாழன், 12 ஜூலை, 2012

புதிய நீதிக் கதைகள் - பாகம் 3 /டெலிபோன் பூத்


புதிய நீதிக் கதைகள் - பாகம் 3

"சொல்லுங்கண்ணே அடுத்த நீதிக் கதை கேட்டு நாளாச்சுண்ணே   "
"பிரபாகர்,முருகன்,குண்டன் என்று  மூன்று பேர் இருந்தனர் " 
"மறுபடியும் அவுங்க தானா?? போர் அடிக்குது, சரி சொல்லுங்க அந்த லூசுப் பசங்க என்ன செஞ்சாங்க ??"

                  **************************************
பிரபாகர்,முருகன்,குண்டன் மூன்று பேருமே கில்லாடிகள் தான், ஆனால் அவர்களில் குண்டன் சற்று திறமை குறைந்தவன்.  ந்த இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் ஐந்து ஆண்டுகளில் மொபைல் போன் என்பது மிகப்பெரிய விஷயம், பிரபாகர் வைத்திருந்தான். ஒரு ஏரியல் கம்பி உடைய செல் போனை தன் கல்லூரியின் கட்டணத்தை அதிகமாக வீட்டில் காட்டி லபக்கியிருந்தான், வீட்டிற்கு ஒற்றைப் பிள்ளையான முருகனோ அயல் நாட்டில் இருந்து வரும் தான் தந்தையிடம் கெஞ்சக் கூத்தாடி 6600 எனும் அதிநவீன மொபைல் போனைக் கொண்டு வந்து அந்தக் கல்லூரியையே ஆச்சரியப் படுத்தினான்.

ஆனால் அந்த இரண்டு பயல்களும் செல்போன் வாங்கினார்கள் தவிர அதை உபயோகிப்பதில்லை அப்போது இன்கமிங்கே கட்டணம் என்பதால் அவர்கள் அதை ஒரு ஆபரணமாகத் தான் அணிந்து வந்தார்கள். மற்றபடி அவர்கள் கடலை எல்லாம் பப்ளிக் டெலிபோன் பூத்தில் தான். முதலில் முருகனுக்கு தான் பெண் தோழிகள் கிடைத்தனர், பினனர் பிரபாகரனுக்கு. இவர்களுக்குப் பின் பெஞ்சில் அமர்ந்திருந்த குண்டனும்( ஆண்கள் பள்ளியிலேயே படித்தவன் ) "பக்கத்து இலைப் பாயசமாவது கிடைக்குமே" என்று அவர்களோடு ஒட்டிக் கொள்ள விரும்பினான்.

"படிக்கிற பிள்ள, நல்ல பையன் மாதிரி இருக்கிறான்" இவன நம்ம கூட்டணி சேர்த்துக்கலாமா என்று அந்த இருவரும் யோசிக்கும் போது, சில கிளுகிளுப்பான சர்தார் ஜோக்குகளை சொல்லி மயக்கினான்.
அவர்கள் முழு ஒப்புதல் கொடுக்கும் முன்பே அவர்களின் நண்பன் என தன்னையும் சேர்த்து அழைத்துக் கொண்டான்.

அதற்கு பின் கல்லூரி ஆசிரியர்களோ , அந்த வகுப்புப் பெண்களோ, மற்ற வகுப்பு பெண்களோ பார்க்கும் பொழுது அவர்கள் மூவர்களாகவே இருந்தனர். தியேட்டரிலோ, இன்டர்நெட் சென்டரிலோ, டவுன் பஸ்சிலோ, காலேஜ் கேண்டீனிலோ, டீக் கடையிலோ, மங்களம சாரின் கடையிலோ, ஏன் பாழாய்ப் போன அந்த வகுப்பறையிலோ கூட மூவரும் ஒன்றாகவே அந்த உலகத்திற்கு காட்சி அளித்தனர். ஒரு இடம் தவிர , அது தான் பப்ளிக் டெலிபோன் பூத்தில்.

ஒவ்வொருவரும் தனித்தனியாகத் தான் டெலிபோன் பூத்திற்கு செல்வார்கள், காரணம் கீழே :
1 .முருகனின் பெருமிதம் , "பக்கத்திலிருந்தால் தன் வித்தைகளைக் கற்றுக் கொள்வார்கள்" என்று தனியாகவே பேசி வந்தான் .
2 .பிரபாகரின் எச்சரிக்கை, "அவன் தன் தோழிகளிடம் பேசும்பொழுது யாராவது இருந்து தன்னை ஏதாவது சீண்டிவிட்டால் என்ன செய்வது என்று பயம் ( அந்த குண்டன் அவனை வேண்டும் என்றே பெண்களை அருகில் வைத்துக் கொண்டு அவன் தலையில் அடிப்பது, கிள்ளுவது என்று அவனை உசுப்பேத்துவான், அப்படி செய்தால் எந்த இடம், பொருள்  என எதையும் பார்க்காமல் கெட்ட வார்த்தைகளை உதிர்ப்பான் பிரபாகர், அது அவன் பலவீனம்)
3 .குண்டன் -  இந்த வித்தையில் ஜாம்பவான்களின் அறிவுரை கேளாமல் தனக்கு எல்லாம் தெரியும் என்ற அகம்பாவத்தில், அவன் பல முறை போனில் தன் தோழிகளுக்கு அழைக்கும் போது அவர்களின் அண்ணன் மார்களிடமோ, தகப்பன் மார்களிடமோ மாட்டிக் கொண்டு அடிக்கடி திட்டு வாங்கும் வழக்கம் உடையவன்.

மூவரும் இதில் மட்டும் தங்கள் ரகசியங்களை காத்து வந்தனர், அவர்கள் வாழ்க்கையில் கல்லூரிக் காலங்களுக்குப் பிறகாவது தங்கள் விசயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கலாம்,அதையும் அவர்கள் செய்யவில்லை. இதனால் அதிகம் பாதிக்கப் பட்டவன் குண்டன் , ஆனால் அது அவன் திருமணத்திற்குப் பின் தான் நடந்தது. இதற்கும் அதற்கும் என்ன சமபந்தம் என்று கேட்குறீங்களா ?? சொல்றேன்.

பின்னே, 'கட்டிய மனைவிடம் போனில் பேசிக்கொண்டிருந்த  குண்டன், அப்பொழுது தன் மனைவியுடைய அப்பா அவர்களுடைய வீட்டிற்கு திடீரென்று வந்ததை ,"அப்பா வந்துட்டாரு " என்று சொல்ல, அதற்கு உடனேயே ""அய்யய்யோ அப்போ போன வச்சுடு நாளைக்கு பாத்துக்கலாம்" என்று அழைப்பைத் துண்டித்து விட்டானே ' இதை நீங்க என்னன்னு சொல்வீங்க??. குண்டன் மற்ற இவர்களின் அறிவுரையைக் கேட்டிருந்தால்  இப்படி ஆயிருக்குமா ??? 
                       *********************
"என் குண்டனுக்கு என்ன ஆச்சுண்ணே!  "
"அவ்ளோ தாம்பா! கதை முடிஞ்சு போச்சு  -no space, இனி கதைக்கான நீதி "

நீதி: தன் நண்பர்களிடம் தன் கெத்தை விட்டுக் கொடுத்து அவர்கள் அறிவுரைகளைக் கேட்பவன்  எப்பொழுதும் மனைவியின் உதைகளுக்கு ஆளாகமாட்டான்.
        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக