புதன், 13 மார்ச், 2013

# tag கதைகள்

அது காதல்


# 01 :

இத்தனை நாளாய் வசைபாடித் தீர்த்துவிட்டு, மறுகணமே , உன் பெயரை அது உச்சாடனம் செய்ய ஆரம்பித்துவிட்டது ...
மீண்டும் அதை நீ கொல்ல வேண்டும் - வரம் கொடு....###01

# 02 :

”சாகா வரம் பெற்றேன்” என்று கொக்கரித்துக் கொண்டு தான் உன் மேல் மையல் கொண்டதாம்.
பின்னர் ஒரு நாள் என்னிடம் சொல்லியது “சாவு தான் எனக்கு வேண்டிய ஒரே வரம்” என்று... ###02

# 03

உன் வாசம் அதற்கு மிகவும் பிடித்து விட்டதாம் , உன் வாசத்தின் வேதியல் சமன்பாட்டை என்னிடம் வந்து கேட்கிறது.
“விக்கிபீடியாவுக்கோ, அண்ணா நூலகத்திற்கோ போய்த் தொலை!” என்று சபித்து விட்டேன் நான்... பாவம் அது நம்பிவிட்டது...###03

#04

தினமும் என்னைத் தூங்க விடாமல் ஓலமிட்டுத் தொந்தரவு செய்கிறது என்று சங்கிலியால் பிணைத்து வைத்தேன்.
இன்றிரவு மறுபடியும் அவள் பெயரை உச்சாடனம் செய்கிறது, கூடுதலாக சங்கிலியையும் “தரதர” வென இழுத்துக் கொண்டே...###04

#05

ஒரு காகிதத்தில் கோழி முட்டை போல வரைந்து வைத்து, “இது அவளுடைய ஓவியம் எப்படி இருக்கிறது”என்று கேட்டது.
நான் கோபத்துடன் அதன் மீது சில கிறுக்கல்கள் செய்தும், சில முட்டைகள் வரைந்தும் காண்பிக்க.
அது சிரித்த படியே ”நன்றி” சொல்கின்றது...###05

#06

திடீரென்று ஒருநாள், “தற்கொலை பண்ணப் போகிறேன்” என்றது. காலில் விழுந்து சமாதானம் செய்து என்னைக் காப்பற்றினேன்.
பின்னர் ஒருநாள் “அவளைக் கொலை செய்யப் போகிறேன்” என்றது, வேறு வழியில்லை “பொய் சொன்னேன்”...###064 கருத்துகள்:

  1. சுடுகின்ற பாறையில் பட்டுத் தெறிக்கும் கண்ணீர்த்துளிகள்!

    பதிலளிநீக்கு
  2. பேச நா எழாதபடி தொண்டையை அடைத்துக்கொள்ளும் உயிர்ப்பறவையின் வலி மிகுந்த சிறகடிப்பு..!

    பதிலளிநீக்கு