சனி, 27 அக்டோபர், 2012

உயிர் விளையாட்டு
உனக்காய் மீட்டிய இசையில் 
ஈனம் ஒலித்திடநோய்மையாய் 
தெரிகிறது நம்காதல்.

மழை குளிர்விப்பதாலே
எரிந்துக் கொண்டிருக்கிறேன்.
அகத்தில் ஈரப்பதத்துடன் 

முரணாகப் 
புணர்ந்துக் கொண்டிருக்கும்
அணுக்களுக்குள் அதிர்வுகளில்லை
கதிரியக்கம் கண்வழியே வழிந்தோடுகிறது.


ஞாபகமீனாக தூண்டில் தேடுகிறது,
தூண்டிலுக்கான உவமையாக
நீண்டப் பிரிதலைப் பரிசளித்தாய்.

தராத முத்தம் யாவும்
பழி வாங்கப் புறப்பட்டும்
மடிந்துவிடுகிறது 
ஒழுக்கத்தின் மயானவெளி

போதுமே 
இந்த உயிர் விளையாட்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக