புதன், 23 பிப்ரவரி, 2011

நாத்திகர்களுக்கு ஒரு கடிதம் - (சதுரகிரி மலைப் பயணக் கட்டுரை ) பகுதி - 1


 நாத்திகர்களுக்கு ஒரு கடிதம் :

          என் அன்புக்குரிய நாத்திகனே!! உன் இனத்தில் இருந்து நான் விடுபட்டு கிட்ட தட்ட 3 ஆண்டுகள் ஆகிவிட்டன.இன்று உனக்கு நான் ஒரு சேதி சொல்ல விரும்புகிறேன்.கடவுளை நம்பும் பல மதத் தலைவர்களை - ஆன்மிகவாதிகளை விட உருப்படியான வாழ்க்கை வாழும் நல்லவனே. ஆண்மேகாதுக்கு சிறந்த வழி தான் நாத்தீகமோ!! உன்னுடன் சேர்ந்து கடவுள் இல்லை என்று சொன்ன நான், இன்று உனக்கு கடவுளை பற்றி சொல்கிறேன்.

           இதை நான் மதவாதிகளுக்கு சொன்னால் என்னை ஏளனம் செய்வார்கள், எட்டி உதைப்பார்கள். ஆனால் நீயோ நான் சொல்வதை மறுத்தளித்து பேசுவதற்காகவாவது ,முழுவதும் கேட்பாய். 

    கடவுள் இருந்த நல்லா இருக்கும், அவர் இருத்தலை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. எனக்கு தெரியாத, புரியாத வரை அது கடவுள் இல்லை , It's all an intelligent design என்ற எண்ணங்கள் ஒரு புறமும், கடவுளை பற்றிய அதீத கற்பனையுடன் மத விளக்கங்கள் சொல்லும் மனிதர்கள் மறு புறமும் இருக்க , இந்த சதுரகிரிப் பயணம் மூலம் என் மனம் அடைந்த ஒரு உணர்வை பகிர்ந்து கொள்ள முடிவெடுத்து ஆரம்பிக்கிறேன்.

யார் கடவுள்???
            பொதுவாக, நம் பெற்றோர் சொல்லிக் கொடுத்த முறையில் கைகளை கூப்பிக் கொண்டு, மண்டியிட்டு, மந்திரம் சொல்லி, ஜபித்து ,நாம் குழந்தைகளாய்  இருக்கும் பொழுது நமக்கும் கடவுளுக்கும் கொண்ட தொடர்பு உருவானது. வெளியில் சென்று கல்வி பயிலும் போது, சிந்தனை வளர்க்கும் போது கடவுளை பற்றிய சந்தேகம் உருவாகும்.ஆக, நம்பிக்கை மற்றும் சிந்தனை ஆகிய இரண்டு புள்ளிக்கும் மத்தியில் தான் நம் கடவுள் மறைந்திருக்கிறார்.

          அறிவுக்கும்,உணர்வுக்கும் இடையில் கடவுள் தன இருத்தலை ரகசியப் படுத்தியுள்ளார்.இங்கே, அறிவியல் கடவுளை பொய்ப்பிக்கும் வேலையில் மிகவும் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.ஆனால், கடவுள் என்ற பெயரில் பல்வேறு மார்க்கங்களிலும், மதங்களிலும் மக்கள் தங்களை அர்ப்பனிப்பதும் பெருகி வருகிறது.

     இருத்தல்(existence ) என்ற ஒரு இல்லையெனில், அதை பற்றிய சர்ச்சை எப்படி உருவாகும்??? எனது தான் கேள்வி {இந்த கேள்வியை சற்று கூர்ந்து கவனியுங்கள்}.உதாரணம்: நான் எழுதும் இந்த இடுகையில் (blog) எந்த ஒரு வீடியோ காட்சியும் இல்லை என்று நீங்கள் உணர்ந்தீர்களா? ஆம் இல்லை தான் ஆனால் வீடியோ காட்சி என்பது (the existence of video file is somewhere) எங்கேயோ ஒரு இடத்தில் இல்லது அல்லவா ? இந்த எளிய உதாரணம் உங்களுக்கு புரியவில்லையா ? அப்படித் தான் கடவுள் என்பதும் மிகவும் எளிமையான ஒரு விஷயம் தான் நமது அறிவினால் எட்டிப் பிடிக்க முடியவில்லை.

நம்பிக்கை தான் கடவுள், அன்பு தான் கடவுள், தாய் தான் கடவுள், இயற்க்கை தான் கடவுள், மாயை தான் கடவுள் - மேலும் மனிதன் உருவாக்கிய உருவங்களும், கதைகளும், சிற்பங்களும், இசை தான் கடவுள், இல்லை மதந்தான் கடவுள் என்று கடவுள் பயணிக்கும் எல்லா எல்லைகளிலும், அந்த எல்லா எல்லைகளிலும் கடவுளின் இருத்தல் தான் சூட்சுமம் ஆனது.

       அன்புள்ள நாத்திகனே !!! கடவுள் என்ற பெயரில் மற்றொருவன் கோயிலை இடிப்பதும், பழிப்பதும், அழிப்பதும் மதவாதிகளின் வேலை,ஏன் தெரியுமா ??நாங்கள் வணங்கும் கடவுள் சிவனோ , அல்லாவோ, பெருமாளோ, இயேசுவோ, புத்தனாகவோ இருக்கலாம், நீ வணங்கும் கடவுள் பெயர் தான் "இல்லை " மிகவும் சூட்சுமமாக உனக்குள்ளும் மறைந்து இருக்கிறார்.கடவுள் உன்னுடன் மிகவும் துன்பப் படாமல் அழகாக வாழ்ந்து வருகிறார்.பெரியார் சொல்லும் வெங்காயம் போலத் தான், மதவாதிகள் சொல்லும் கடவுளை உரித்து உரித்து பார்த்தால் ஒன்றும் இல்லை - நமக்கு கண்ணீர் மட்டுமே மிஞ்சுகிறது.ஆனால் கடவுளோ அறிவியல் சொல்லும் வெற்றிடமாய் (vaccum) கூட ஒரு தன்மையை உணர்த்துகிறார்.(எம்ப்டிநேச்ஸ்)

     கடவுள் இல்லை என்று சொல்லும் போது, உனக்குள்ளும் வந்து போகிறார்.(when you try to say 'there is no god', he travels in you  -its promise). 

    ஆனால், நீ சொல்வது தான் சரி-  'கடவுள் இல்லை' என்பதில், மற்றொரு அர்த்தமும் இருக்கிறது, இன்று வரை நாமும் , நம் மதங்களும்  சொல்லும் கடவுளை பற்றிய அதனை கருத்துகளும், சம்பாசனைகளும், பாடிய ஓசைகளும், எழுதிய நூல்களிலும் நம்மால் கடவுளை உணர்த்தவோ இல்லை உணரவோ முடியவில்லை.ஏனெனில், அந்த ஒன்று எல்லாவற்றையும் கடந்தது.அப்படி உணர்ந்த ஒருவன் மவுனத்தில் மட்டுமே இருப்பான்.(He don't need any language). அந்த விவரிப்புக்கு( definition ) அப்பாற்பட்ட ஒன்றினை தான் நாம் கடவுள் என்கிறோம். அதை உணர்ந்தவன் தான் சித்தன்(saint ) ஆகிறான் - அவனைத் தேடி என் பயணம் அல்ல, ஆனால் என்னைத் தேடி அவன் தரிசனம் கிடைத்தது.அது தான் இரண்டாம் முறை சென்ற சதுரகிரி மலைப் பயணம்.

(நான் யாரையும் என் கட்டுரையை நம்ப சொல்லவில்லை - உணர்ந்தவர்கள் எனது அடுத்த பகுதியை படிக்கலாம்)

(தொடரும்) - சதுரகிரி மாலைப் பயணக் கட்டுரை   - 2-ஆம் பகுதியில் 


7 கருத்துகள்:

  1. da sithan irukiraana illaya avanakku sakthi eppadi kidaithathu, all these topics or a big and different but am saying that after looking at him don't ever ever beleive that GOD is doing this... But I like to read your next post... Kepp posted...

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. Hope you would have remember on that day we both has been separated from our team and now i am thanking for the split else we might not feel the above now....

    Really it's a fantastic moment which will never come across!!!!!!!!!

    Yes what ever happening in life there should be a reason for that.... (If you say there is "NO GOD" or "GOD IS EVERY WHERE")

    Life is nothing but full of "______________________________________________"
    which has to be filled

    பதிலளிநீக்கு
  4. OH.... YOUR COMMENT HAS GOLDEN WORDS (Life is nothing but full of "______________________________________________"
    which has to be filled)

    பதிலளிநீக்கு
  5. நண்பனே எனக்கு ஒரு சந்தேகம் ...



    அதற்கு பதில் கிழ்கண்டவற்றில் ஒன்று ...



    1 ) Chaos Theory .

    2 ) தற்செயல் .

    3 ) விதி .



    உனக்கு இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு பெயர் வைத்தானே காளிதாசன் என்று - அது எப்படி ?



    நியே சொல் .......

    பதிலளிநீக்கு
  6. காளிதாசன் -

    பதில் - என் பெற்றோருக்கு திருமணமாகி ஏழு வருடங்களுக்கு பின்பு நான் பிறந்தது காளியின் அருளினால் நான் பிறந்தேன், ஆதலால் எனக்கு அப்பெயர் சூட்டப் பட்டது. (விதி , தற்செயல் )

    உணர்ந்தேன்:- ஆனால், காளிதாசனை ஒரு personality ஆக மாற்ற, நான் எடுத்துவரும் முயற்சிதான்.இந்த கேள்வியை என்னை பார்த்து கேட்க வைத்து விட்டது. ஆகவே, காளிதாசன் என்ற பெயர் ஒரு personality ஆக மாற்ற - சுமார் 25 வருடங்களை கரைத்து இருக்கிறேன்.. இன்னும் ஆரம்ப நிலையில் தான் இருக்கிறேன். So , இது ஒரு chaos theory ம் அல்ல

    பதிலளிநீக்கு