வெள்ளி, 3 செப்டம்பர், 2010

ஆட்டோகிராப்-2 ( அந்தி மாலை மயக்கம் )

  


கதை ஆரம்பிக்கும் இடம்,பாண்டிச்சேரியில் பிரபலான அந்த கடற்கரை ஓட்டலின் ஒரு டீலக்ஸ் அறையில்.


அருள் மொழி வேலை பார்க்கும் அலுவலகத்தில் இருக்கும் அனைத்து ஆண்களும்,(அவுங்க boss உட்பட) எகூடி இருந்தனர். அவர்களுக்கு முன் ஒரு குவியல் ஒன்று இருந்தது.
(மது நாட்டுக்கும், வீட்டுக்கும்,உடல் நலத்திற்கும் கேடு).  


அந்த கம்பெனி தொடங்கி பத்து ஆண்டுகள் நிறைவானதை ஒட்டி அந்த கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.பார்ட்டி ஆரம்பமானது, கம்பெனியிலே மிகவும் அமைதி பூச்சியான அருள் மொழியும் அவர்களுடன் அமர்ந்து இருந்தான்.


புகை மூட்டம் அந்த அறையினை சூளஆரம்பித்தது, அந்த அலுவலகத்தின் சீனியர் ஒருவன் பாட்டிலை திறந்து ஊற்றினான்.எல்லோருக்கும் ஒரு ஸ்மால்  வந்தது "காஸ்ட்லி சரக்கு டா!! பார்த்து அடிங்க, எகிறுடும் " என்று எச்சரிக்கை விடுத்தார் பாஸ். மேலும் அவர், "டேய் அருள்!! இன்னிக்காவது எங்களோட கரெக்டா மின்கிளாகு, சும்மா ஊமை மாதிரி இருக்காத " என்றார்.


எல்லோரும் fanta ,coke ,மினரல் வாட்டர் ஊற்றினர்,முதல் ரவுண்டு முடிந்தது.
இரண்டாம் ரௌண்டும் அவ்வாறே முடிந்தது. அப்போது யாரும் சரியாக கவனிக்கவில்லை அருள் "mixing" எதுவுமே கலக்கவில்லை.மூன்றாம் ரௌண்டும் ஆரம்பித்தது,அப்போது அங்கிருந்த சீனியரில் ஒருவன் , "டேய் !! இந்த அருள் ஊமை மாதிரி இருந்துக்கிட்டு ராவா அடிக்கிறான் டா " என்று கத்தினான். 


எல்லோரின் பார்வையும் அவன் மீது திரும்பியது, " டேய் என்னடா கிளாச கையில வச்சுக்கிட்டு முத்தமாட கொடுக்கிறிங்க ------------------" என்று ஒரு செந்தமிழ் வார்த்தை விட , அதற்கு பின்னர் ஒரே நிசப்தம் தான், அருள் மொழியின் குரல் மட்டுமே அங்கு ஒலித்துகொண்டிருந்தது .அப்பொழுது , "உன்ன விட இந்த உலகத்தில் உசந்தது ஒன்னும் இல்ல" என்ற பாட்டு ரிங் டோனாய் ஒலிக்க, தன் பாக்கெட்டிலிருந்து எடுத்தான்,அருள்.


அவன் முகம் சற்று மாறியது,அதை கண்ட அனைவரும் "என்ன ஆச்சு" என்று கேட்டனர்."என் friend க்கு accident ஆயிடுச்சு, ரொம்ப சீரியஸ் " என்று சொல்லிக்கொண்டே ,அறையினை விட்டு வெளியே சென்றான்.அங்கிருப்போர் யாவரும் தன அனுபத்தினை அவனுக்கு காண்பிக்கும் பொருட்டு "உச்" கொட்டினர். அருள் கதவைச் சாத்திக்கொண்டு வெளியே சென்று, ஒன்று குத்தாட்டம் ஒன்று போட்டான்."மவனே செத்தடா நீ , உனக்கு சீக்கிரமா ஊத்தறேண்டா பால் ".


அங்கு தான் ஆரம்பமாகிறது ஒரு சின்ன ப்ளாஷ்பேக், இந்த வஞ்சத்தின் காரணம் அவனது 14 ம் வயதில் உள்ளது.அதன் பெயர் தான் "சந்திர வதனா".








part -2


"சந்திரவதனா", இந்த பெயரை அருள் மொழி அந்நாளில் ஒரு நாளைக்கு ஆயிரம் முறையாவது சொல்லிக்கொள்வான்,அப்பொழுது அவன் 9ம் வகுப்பு படித்து கொண்டிருந்தான்.அவன் படித்தது "B" செக்சன்-ல் , அந்த பள்ளிக்கூடம் சதுரமாக கட்ட பட்டிருக்கும்.அவனுக்கு நேர் எதிர் அறையில் ஒன்பதாம் வகுப்பு ''D'' பிரிவு இருந்தது.

அவன் 8 -ஆம் வகுப்பு வரை அவர் அப்பா வேலை பார்த்து வந்த ஒரு இடைநிலைப் பள்ளியில் படித்து வந்தான்.ரொம்ப பயந்த சுபாவம் கொண்ட அவனை வேறு பள்ளிக்கு அனுப்பினாலாவது கொஞ்சம் தயிரியமாய் இருப்பான் என்று அவன் அப்பா கணக்கு போட்டார் .அவனுக்கு யாரும் அதிகமாக பழக்கம் அதிகம் இல்லாததால், கொஞ்சம் தனியாக இருப்பான்.

ஒரு நாள் காலை இடைவேளையின் போது,வகுப்பிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தான், இடைவேளை என்றாலே ஒரு கூச்சலில் அந்த பகுதி முழுதும் மூழ்கி இருக்கும். அருகிலிருக்கும் எலிமெண்டரி ஸ்கூல் பிள்ளைகள் கத்திக்கொண்டும், ஓடிக்கொண்டும் ஒரே புழுதியை கிளப்பி கொண்டே இருந்தனர். அருள் தனியாக வந்து அங்கிருந்த ஒரு சிமெண்ட் பெஞ்ச் மீது அமர்ந்தான்.

பக்கத்தில் யாரோ பேசிக்கொண்டிருப்பது போல் தோன்றியது, அவள் தான் சந்திரா.அவளும் எட்டாம் வகுப்பு வரை அவர்கள் ஊரில் படித்து விட்டு, இந்த பள்ளி விடுதியில் தங்கி படிக்கிறாள். அதனால், அவளுக்கும் அருளைப் போலவே கொஞ்சம் தயக்கம் இருந்தது.

அருள் அவளை சில நாட்கள் கவனித்திருக்கிறான், அவன் வீடு வழியாக தான் போய் வருவாள். அவன் நினைத்தான் "ஒருவேளை இவள் வீடு நம் வீடு பக்கம் தானோ என்று."
இவளும் அவனை பார்த்தது போல் அருளை பார்த்து சிரிக்க யத்தனித்தாள்.அருள்,"இவள் வீடு எங்கே என்று கேட்கலாமோ ?'' என்று அவன் அமர்ந்த பெஞ்சில் ஒரு அரை அடி அவளை நோக்கி நகர்ந்தான்.அவன் எதிர்பார்க்கவே இல்லை ,அவளும் ஒரு அடி நகர்ந்தாள் ,அவனிடம் எதோ சொல்ல முற்பட்ட போது,ஒரு குரல் அருளை அழைத்தது.

"டேய் வாத்தி !!!"' என்று அவன் நண்பன் ஒருவன் அவனை பார்த்து கூப்பிட,அவள் அங்கிருந்து கலைந்து சென்றாள்.அதற்குள் அருகில் வந்து, "டேய் அருள் !! இந்த ஸ்கூல்ல சேர்ந்தே 1 மாசம் தான் ஆகுது ,அதுக்குள்ளே ரெண்டு பெரும் ஒரே பெஞ்சில் உக்கார்ந்து கிட்டு அப்படியே ஜோள்ளுரிங்க! " என்று அருள் தொழில் கை வைத்தான்.

"ச்சே அப்படி எல்லாம் ஒண்ணுமில்லடா!! ரெண்டு பெரும் ஒரே சமயத்துல அந்த பெஞ்சில உட்காந்தோம் அவ்வளவுதான்" என்று மழுப்பியவாரே கேட்டான்."ஆமாம் யாருடா இந்த பொண்ணு நம்ம தெருவுக்கு பக்கமா என்றான்".அப்படி கேட்டவுடன் ஓரக்கன்னாலே அருள் மொழியை பார்த்து,"ஓகோ கதை அப்படி போகுதா??!!?!"என்று இழுத்தான்.

அருளை பற்றி கிசு கிசு உடனே அரங்கேற்றமானது. ஆனால் அருள், அவளை தொடர ஆரம்பித்தான்.சந்திர வதனா அங்கிருக்கும் ஹாஸ்டலில் இருந்து படிக்கிறாள் என்பதை அறிந்தான்.அவன் தினமும் காலையில் டியூஷன் செல்ல அவள் இருக்கும் விடுதியைத் தான் கடந்து செல்வான்.கிட்ட தட்ட 3 வருடம் அவன் அவளை பின் தொடர்ந்தான்.

காலையில் டியுசனுக்கு சென்று திரும்பும் வேளையில் அவளும் பள்ளிக்கு நடந்து செல்வாள்.வெள்ளை சட்டையும், ஊதா பாவடையும் அந்த பள்ளியின் சீருடை.அவள் நடக்கும் போது அப்படியே ஒரு மயில் நடப்பது போல் தோன்றும்.மெதுவாக சத்தம் வாராமல் அவளுக்கு பின்னே ஓட்டி செல்வான் அவன் பின் வருவதை அவள் திரும்பாமலே புரிந்து கொள்வாள். அவன் வீட்டு வழியாக தான் அவளும் செல்ல வேண்டும் , அதனால் அவன் வீட்டருகே உள்ள பாலத்தில் நின்று விடுவான்.

சந்திரவதனா, காரணம் தெரியாமலே அருளை பார்த்ததும் ஒரு புன்னகையை பரிசளிப்பாள்.ஏன் என்று தெரியாது, தன் தோழியிடம் அரட்டை அடிக்கும் போது எவ்வளவு தான் சத்தம் போட்டாலும், சில சமயம் திடீரென தேய்ந்த டேப் ரெக்கார்டர் போல் தாழ்ந்துவிடும் -அந்த சுற்று முட்டும் பார்த்தாள் எங்கோ இருந்து அவளை பார்த்து கொண்டிருப்பான் இந்த அருள்.

அவன் நண்பர்களின் கேலியினை பொருட்படுத்தாது இவனால் போகவில்லை, அவர்கள் கேலி பண்ணுவது தெரிந்தால் ஆவலுடன் பேச முடியாது போகுமோ என்ற அச்சம், அவளிடம் இருந்து அவனை சற்று தள்ளியே வைத்தது.ஆனால் அவன் நண்பர்களோ அவனை "சந்திரா" என்றே அழைக்க ஆரம்பித்தனர்.ஒரு நாள் அவன் வீட்டுக்கு அருகில் உள்ள அந்த வாய்க்கால் பாலத்தில் நடந்து கொண்டே வந்து கொண்டிருந்தான், அருளின்  நண்பன் "டேய் வாத்தி!! சந்திரா எங்கடா?" என்று கத்த, அவன் தந்தை வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தார்.

"மாட்டிக்கொண்டோம்" என்று நினைத்தாவறே வீட்டுக்குள் ஓடினான்.அடுத்த நாள் காலை, அருளின் அப்பா அவன் அருகில்,"தம்பி!! என்னடா தம்பி எதாச்சும் கனா கண்டியா? யாரோ நீயும் உன் நண்பன் சந்திரனும் எங்கேயோ ஊருக்கு போற மாதிரி உளறிக்கிட்டு இருந்தே????" என்றார்.


part -3
அருள் மொழி பயந்து கொண்டே, "அந்த நாயால தான் பயந்து ஏதேதோ தூக்கத்தில் உளறிட்டோம், நல்லவேளை என் அப்பா சந்திரவதனாவை - சந்திரன் என்று நினைத்தார். அந்த பயபுள்ளைய இன்னைக்கு ஏதாவது செய்யணும் " என்று வெறியோடு அன்று பள்ளிக்கு சென்றான்.நேராக வகுப்பிற்குள் சென்று அவனின் கன்னங்களை பழுக்க வேண்டும் என்று சென்றவன்,அன்று அவனிடம் இருந்து வேறு ஒரு இன்ப அதிர்ச்சியை பெற்றான் ,"டேய் பங்காளி!! உன் ஆளு சந்திரா!! டேய் முறைக்காதடா! உன் ஆளு இன்னைக்கு நம்ம ஸ்கூல்ல நடக்குற ஆண்டு விழாவில் பாட போகுதாம்"என்றான்.

'உன் ஆளு !! உன் ஆளு !!' என்று கத்துவது அவன் மீது வெறி ஏற்படுத்தினாலும் , அவனுக்கு அது ஒரு போதையினை ஏற்படுத்தியது.ஆண்டு விழா ஒரே ஆரவாரமாக ஆரம்பித்தது , முதலில் தமிழ் தாய் வாழ்த்து, பின்னர் வரவேற்பு -துணை தலைமை ஆசிரியர், பின்னர் சிறப்பு விருந்தினரின் மொக்கை, பரிசளிப்பு விழா என்று வழக்கம் போல் நடைபெற, பரிசளிப்பின் போது படிப்பிற்காக பரிசு வாங்க அருள் மொழி அழைக்கப்பட்ட சந்திராவை பார்த்தவுடன்.தன் நின்றிருந்த தரையிலிருந்து 2 அடி மேலே சென்றது போல் இருந்தது.

தலை முடியினை நன்றாக விரித்து அடியினில் ஒரு நுனிக்கொண்டையிட்டு , காதிலே லோலாக்கும், லேசாக மை தீட்டிய கண்களும்,சிவப்பு தாவணியும், மஞ்சள் பாவடையும் , சிவப்புச் சாயம் தேவைப்படாத உதடுகளில் ரெடிமேடாக வைத்திருந்த புன்னகையும் அவனை அப்படியே உயரத்தில் ஆழ்த்தியது. அவன் மட்டும் அல்ல அங்கிருந்த பல பேர்களும் வாய் பிளந்து இருந்தனர்.

கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின, பாரதமே ஆடத் தெரியாத இரு மயில்கள் வெள்ளிச் சலங்கைகள் பாட்டுக்கு ஆடின, அப்புறம் ஒரு வில்லு பாட்டு , அதற்கு அப்புறம் ஒரு மாரியம்மா பாடல், அடுத்ததாக சந்திரா வந்தாள்.

சந்திரா மேடையில் தோன்றியதுமே, அருளுக்கு அருகில் இருந்த அவன் நண்பன் ஒரு விசில் அடித்தான். சட்டென்று அந்த பக்கம் தன் பார்வையினை திருப்பினாள்.அங்கு அருள் இருப்பதை கண்டாள்.அவள் கண்களில் இருந்து எதோ ஒரு கனை அருளின் கண்ணில் தொடுக்க.அருள் புரிந்து கொண்டான் 'அவளை பார்த்து தான் விசில் அடிப்பதாக அவள் நினைத்து கொண்டாளோ?' என்று, 'ஒரு வேளை, அது கோபப் பார்வையாக இருக்குமோ ?' என்று சந்தேகித்து கொண்டே, அவன் நண்பனைப் பார்த்து ,"டேய்! விசில் அடிக்காதடா ''  என்று அதட்டினான். அவன் கேலியாக சிரித்து கொண்டே மேடையை கவனித்தான்.பாடல் ஆரம்பித்தது...

"ஒரு இனிய மனது இசையை அழைத்து செல்லும் .... இன்பம் புது வெள்ளம்" என்று அவள் பாட ஆரம்பிக்க, அவளை பார்ப்பதற்கு வெட்கப் பட்டு தலை குனிந்தான்.பாடல் முடியும் வரை தலை எழும்பவில்லை.பாட்டு முடிந்தவுடன் எல்லோரும் கை தட்டியது இவனுக்கே தட்டியது போல் அப்படி ஒரு பெருமை.எல்லாம் முடிந்து வீட்டுக்கு சென்று விட்டான்.அவள் பாடியது, சிரித்தது,முறைத்து, கண் மை, கொலுசு, போட்டு என்று அவ்வளவும் அவன் மனத் திரையில் மறு ஒலிபரப்பு ஆனது.

காமன் பண்டிகை, தஞ்சை மண்ணில் 1000௦ ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப் பட்டுவரும் பண்டிகை.இன்றளவும் இந்த பண்டிகை டெல்ட மாவட்டங்களில் கொண்டாடப்பட்டு வருவதை பார்க்கலாம்.(ஆழ்நிலை தியானத்தில் இருக்கும் சிவனை விரும்பிய பார்வதி காமனிடம் உதவி கேட்க , காமன் தன் பானத்தால் சிவனை எழுப்பி காதல் கொள்ள செய்கிறான்.ஆனால் சிவனோ தன் தவத்தை கெடுத்த காமனை எரித்து விடுகிறான். காமனின் காதலி ரதி இவ்விளக்கங்களை சிவனுக்கு சொல்லி காமனை மீட்டு வருகிறாள். காலப் போக்கில் இந்த பண்டிகை காமனை எரிப்பதையே முக்கிய நிகழ்வாக வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது).

அருள் மொழியால் அந்த காமன் பண்டிகையினை மறக்கவே முடியாது. அவன் 10ம்   வகுப்பு படிக்கும் போது நடைபெற்ற காமன் பண்டிகை அன்று.அந்த ஊரில் ஒவ்வொரு தெருவிலும் இப்படிப்பட்ட சடங்கு நடைபெறும்.அந்த அருள் மொழி வசிக்கும் தெருவில் தான் அந்த ஊரிலேயே மிகவும் விசேஷம்.அந்த தெருவில் உள்ள இரண்டு சிறுவர்களை பொறுக்கி எடுத்து ஒருத்தனை காமாண்டியாகவும்,ஒருத்தனை ரதியாகவும் வேடமிட்டு ஊர்வலம் இழுத்து வர, ஒரு பல்லக்கில் ரதி மற்றும் காமனின் படங்களை ஒட்டி தெருவெங்கும் ஊர்வலம் கிளம்பியது.எப்போதும் வேடிக்கை மட்டுமே பார்க்கும் அருள், இந்த வருடம் பல்லக்கு தூக்கும் வேலையே மேற்கொண்டான்.ஊர்வலம் அவள் தங்கி இருந்த விடுதிக்கு அருகில் சென்றது அப்படியே மேலே பார்த்துக் கொண்டே சென்றான்.கொட்டு மேளத்தின் சத்தம் அந்த விடுதியில் இருக்கும் அத்தனைபேரையும் எழுப்பியது.

அவள் எங்கிருக்கிறாள் என்று தேடிக்கொண்டே அங்கு நின்றான் , பல்லக்கை இன்னொருவனிடம் கொடுத்து விட்டு சற்று விலகி வந்து அந்த விடுதியையே பார்த்து கொண்டிருந்தான் அவள் அங்கு இல்லை. மிகுந்த களைப்புடனும்,மனச் சோர்வுடனும் காமன் எரிக்கும் மைதானத்திற்கு வந்தான்.

காமனை எரித்துவிட்டு,அங்கே அந்த நெருப்பு வெளிச்சத்தில் குறவன்-குறத்தி ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.அந்த குறவன்-குறத்தி பேசிய ரெட்டை அர்த்த வசனங்களுக்கு அர்த்தம் புரிந்தும் புரியாமலும் விழித்துக் கொண்டிருக்க, அவனுக்கு பழக்கப்பட்ட குரல் "டேய் அருள் !! டேய் அருள் !! என்று உரிமையுடன் இரண்டு முறை ஒலித்தது".

தன் அக்காவின் குரல் தான் அது அன்று குரல் வந்த திசையில் திரும்பிய அருளுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.தான் அக்காவிற்கு மிக மிக அருகில் சிரித்துக் கொண்டே நின்றிருந்தாள் சந்திரா வதனா.






(தொடரும்)  




----கரி

4 கருத்துகள்: